TCV 35

ஆயச்சியின் பிள்ளை ஆயினாயே!

786 அம்புலாவுமீனுமாகி ஆமையாகி ஆழியார் *
தம்பிரானுமாகி மிக்கதுஅன்புமிக்கு அதன்றியும் *
கொம்பராவுநுண்மருங்குல் ஆயர்மாதர்பிள்ளையாய் *
எம்பிரானுமாயவண்ணம் என்கொலோ? எம்மீசனே!
786 ampu ulāvu mīṉum āki * āmai āki āzhiyār *
tampirāṉum āki mikkatu * aṉpu mikku atu aṉṟiyum **
kŏmpu arāvu nuṇmaruṅkul * āyar-mātar pil̤l̤aiyāy *
ĕmpirāṉum āya vaṇṇam * ĕṉkŏlo? ĕm īcaṉe (35)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

786. You with a discus who give your love to all, took the forms of a fish that swims on the ocean and of a turtle and you were a child for the cowherd woman Yashodā with a waist as thin as a vine. O lord, what is your magic that you are a cowherd and also our god?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் ஈசனே! எம்பெருமானே!; ஆழியார் ஆழியைக்கையிலுடைய; தம்பிரானும் ஸ்வாமியாகவும்; அம்பு உலாவு நீரில் உலாவுகின்ற; மீனும் ஆகி ஆமை ஆகி மீனாகவும் ஆமையாகவும்; ஆகி மிக்கது அவதரித்துப் பெருமைபெற்று; அன்பு மிக்கு மிகுந்த அன்பையும் காட்டியருளி; அது அன்றியும் இதற்கு மேலும்; கொம்பு வஞ்சிக்கொம்பு போலும்; அராவு பாம்பு போலும்; நுண்மருங்குல் நுட்பமான இடையையுடைய; ஆயர் மாதர் ஆயர் பெண்ணுக்கு; பிள்ளையாய் பிள்ளையாய்ப் பிறந்து; எம்பிரானும் எம்பிரானுமாக; ஆயவண்ணம் நின்ற நிலையும்; என்கொலோ என்ன அற்புதம்!