34 பாட்டு –அவதாரிகை – கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு பார்க்காதே –விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை **அனுபவித்தார் –**இதில் – கார்ய காரணங்கள் என்ன – பிரமாண ப்ரமேயங்கள் என்ன – சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன