TCV 30

யாவற்றையும் உண்டு துயின்றாயே!

781 வானகம்மும்மண்ணாகம்மும் வெற்புமேழ்கடல்களும் *
போனகம்செய்தாலிலைத்துயின்ற புண்டரீகனே! *
தேனகஞ்செய்தண்ணறும் மலர்த்துழாய்நன்மாலையாய்! *
கூனகம்புகத்தெறித்த கொற்றவில்லியல்லையே?
781 vāṉakamum maṇṇakammum * vĕṟpum ezh kaṭalkal̤um *
poṉakam cĕytu ālilait tuyiṉṟa * puṇṭarīkaṉe **
teṉ akañcĕy taṇ naṟum * malart tuzhāy naṉ mālaiyāy *
kūṉ akam pukat tĕṟitta * kŏṟṟa villi allaiye? (30)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

781. You who are the sky, earth, hills, and seven oceans are as lovely as a lotus and you carry a victorious lotus. You enjoyed the food served for Indra and slept on a banyan leaf, you shot a stone from your sling and hit Manthara’s hunched back and you are adorned with a lovely fragrant cool thulasi garland that drips with pollen.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானகமும் ஸ்வர்க்கத்தையும்; மண்ணகமும் பூமியையும்; வெற்பும் ஏழுமலைகளையும்; ஏழ் கடல்களும் ஏழுகடல்களையும்; போனகம் செய்து அமுது செய்து; ஆலிலைத் துயின்ற ஆலந்தளிரிலே துயின்ற; புண்டரீகனே! எம்பெருமானே; தேன் அகஞ்செய் தேன் நிறைந்த; தண் நறும் குளிர்ந்த மணம் நிறைந்த; மலர்த் துழாய் திருத்துழாயை; நன் மாலையாய் நல்ல மாலையாக அணிந்தவனே!; கூன் கூனியின் கூனானது; அகம் புகத் உள்ளே ஒடுங்கும்படி; தெறித்த விட்டெறிந்த; கொற்ற வில்லி வெற்றி வில்லை; அல்லையே உடையவன் அன்றோ?