TCV 3

நின்னை யாவர் காண வல்லார்?

754 ஐந்துமைந்துமைந்துமாகி அல்லவற்றுளாயுமாய் *
ஐந்துமூன்றுமொன்றுமாகி நின்றவாதிதேவனே! *
ஐந்துமைந்துமைந்துமாகி அந்தரத்த ணைந்துநின்று *
ஐந்துமைந்துமாயநின்னை யாவர்காணவல்லரே?
754 aintum aintum aintum āki * allavaṟṟu ul̤āyumāy *
aintu mūṉṟum ŏṉṟum āki * niṉṟa āti tevaṉe **
aintum aintum aintum āki * antarattu aṇaintu niṉṟu *
aintum aintum āya niṉṉai * yāvar kāṇa vallare? (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

754. You are the chief of the twenty-four philosophies, the five elements water, land, fire, wind and the sky, the five sense organs, body, mouth, eyes, nose and ears, the five organs of action, mouth, legs, hands, the unclean organs, the five senses, taste, sight, hearing, smell and touch and the four organs of knowledge, mind, ego, knowledge, and ignorance. You who stay in the sky are all these and more. O Māyan, who can see you?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐந்தும் வானம் நீர் பூமி தீ காற்று ஐந்தும்; ஐந்தும் கண் காது மூக்கு நாக்கு தோல் ஐந்தும்; ஐந்தும் சுவை ஒளி ஒசை நாற்றம்தொடு உணர்வு ஐந்தும்; ஐந்தும் ஆகி வாக்கு கை கால் ஜல மல விசர்ஜனேந்த்ரியம் ஐந்தும்; மூன்றும் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் என்ற மூன்றும்; ஒன்றும் மனஸாகிய ஒன்றும்; ஆகி ஆக இருபத்தினாலு தத்துவங்களுக்கு நிர்வாகனாய்; அல்லவற்று அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும்; உளாயுமாய் நின்ற அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற; ஆதி தேவனே! முழு முதற்கடவுளே!; அந்தரத்து பரமபதத்திலே; அணைந்து நின்று பொருந்தி நின்று; ஐந்தும் பஞ்ச சக்தியையும்; ஐந்தும் ஞானேந்திரியங்களையும்; ஐந்தும் ஆகி கருமேந்திரியங்களையும் நிர்வகிக்கும்; ஐந்தும் போகஸ்தானம் போகோபகரணம் வைகுந்தத்தமரர்; ஐந்தும் ஆய நியாமகனுமாய் உள்ள உன்னை; யாவர் காண வல்லரே? யார் அறியவல்லர்?