TCV 26

உன் மாயம் தான் என்னே!

777 ஆணினோடுபெண்ணுமாகி அல்லவோடுநல்லவாய் *
ஊணொடோசையூறுமாகி ஒன்றலாதமாயையாய் *
பூணிபேணுமாயனாகிப் பொய்யினோடுமெய்யுமாய் *
காணிபேணும்மாணியாய்க் கரந்துசென்றகள்வனே.
777 āṇiṉoṭu pĕṇṇum āki * allavoṭu nallavāy *
ūṇŏṭu ocai ūṟum āki * ŏṉṟu alāta māyaiyāy **
pūṇi peṇum āyaṉ āki * pŏyyiṉoṭu mĕyyumāy *
kāṇi peṇum māṇiyāyk * karantu cĕṉṟa kal̤vaṉe (26)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

777. You have taken form of a man, Rāma, and a woman, Mohini. You are what is good and what is evil, food, sound and smell, the false and the true, and you are illusory and appear to be nothing. You have been a cowherd looking after bulls and you went to Mahābali as a dwarf and took his land. You are a thief.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆணினோடு ஆணுக்கும்; பெண்ணும் ஆகி பெண்ணுக்கும் அந்தராத்மாவாய்; அல்லவோடு நபும்ஸக ஜாதிக்கும்; நல்லவாய் நிர்வாஹகனாய்; ஊணொடு ஓசை சப்தம் ரஸம்; ஊறும் ஆகி ஸ்பர்சம் ஆகியவைகளுக்கு நியாமகனாய்; ஓன்று அலாத எல்லாப் பொருளாகவும் இருக்கும்; மாயையாய் ப்ரக்ருதிக்கும் நிர்வாஹகனாய்; பூணி பேணும் பசுக்களை மேய்கிக்கிற; ஆயன் ஆகி இடையனாய்; பொய்யினோடு துர்யோதநாதிகளுக்கு பொய்யனாய்; மெய்யுமாய் பாண்டவர் பக்கலிலே மெய்யனாய்; காணி பேணும் மூவடி நிலத்துக்கு ஆசைப்பட்ட; மாணியாய் பிரம்மசாரியாய்; கரந்து சென்ற கள்வனே! மறைந்து சென்ற மாயனே!