TCV 25

கண்ணனே! உன் கருத்து யாருக்குத் தெரியும்?

776 வரத்தினில்சிரத்தைமிக்க வாளெயிற்றுமற்றவன் *
உரத்தினில்கரத்தைவைத்து உகிர்த்தலத்தையூன்றினாய் *
இரத்திநீயிதென்னபொய்? இரந்தமண்வயிற்றுளே
கரத்தி * உன்கருத்தை யாவர்காணவல்லர்கண்ணனே.
776 varattiṉil cirattai mikka * vāl̤-ĕyiṟṟu maṟṟavaṉ *
urattiṉil karattai vaittu * ukirttalattai ūṉṟiṉāy **
iratti nī-itu ĕṉṉa pŏy? * iranta maṇ vayiṟṟul̤e
karatti * uṉ karuttai yāvar kāṇa vallar? * kaṇṇaṉe (25)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

776. You took the form of a man-lion, split open Hiranyan’s chest with your claws and killed him who had received many boons doing hard penance. You came as a dwarf and begged for land from Mahābali, but what kind of lie was that, since the world was already yours? Did you hide the land in your stomach that you received by begging him? O Kanna! Who has the ability to know what you think?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணனே! கண்ணனே!; வரத்தினில் பிரமன் தந்த வரத்தில்; சிரத்தைமிக்க அதிக நம்பிக்கையுடையவனாய்; வாள் எயிற்று வாள் போன்ற கோரப்பற்களையுடைய; மற்றவன் இரணியனின்; உரத்தினில் மார்விலே; கரத்தை வைத்து கைகளை வைத்து; உகிர்த்தலத்தை நகங்களால்; ஊன்றினாய் அழுத்திக் கொன்றாய்; நீ இப்படிப்பட்ட நீ; இரத்தி மாவலியிடத்தே சென்று யாசித்தாய்; இது என்ன பொய் இது என்ன இந்திரஜாலம்!; இரந்த மண் யாசித்துப்பெற்ற உலகத்தை; வயிற்றுளே வயிற்றுக்குள்ளே; கரத்தி ஒளித்து காப்பாற்றினாய்; உன் கருத்தை உன்னுடைய கருத்தை; யாவர் உன் செயலை யார்; காண வல்லர் கண்டறியவல்லார்!