TCV 2

ஆய மாயனே! நின்னை எப்படி நினைப்பது?

753 ஆறுமாறுமாறுமாயொ ரைந்துமைந்துமைந்துமாய் *
ஏறுசீரிரண்டுமூன்றும் ஏழுமாறுமெட்டுமாய் *
வேறுவேறுஞானமாகி மெய்யினொடுபொய்யுமாய் *
ஊறோடோசையாயஐந்தும் ஆய ஆயமாயனே!
753 āṟum āṟum āṟumāy * or aintum aintum aintumāy *
eṟu cīr iraṇṭum mūṉṟum * ezhum āṟum ĕṭṭumāy **
veṟu veṟu ñāṉam āki * mĕyyiṉoṭu pŏyyumāy *
ūṟoṭu ocaiyāya aintum * āya āya māyaṉe (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

753. You are the six actions— learning, teaching, performing sacrifices, making others perform sacrifices, giving and receiving. You are worshipped by the fifteen sacrifices. You are the beautiful two—wisdom and renunciation, and the three devotions, devotion for god, the devotion that gives knowledge to know god, and the highest devotion that gives Mokshā. You are the seven and six and eight. You are many wisdoms, the true and the false. You are taste, light, touch, sound and smell. You, Māyan, are everything on earth yet who can see you?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆறும் கற்றல் கற்பித்தல் யாகம் செய்தல் செய்வித்தல் தானம் செய்தல் & தானம் பெறுதல் போன்ற ஆறு தொழில்களும் நிர்வாஹனாய்; ஆறும் ஆறு பருவநிலைகளும் நிர்வாஹனாய்; ஆறுமாய் ஆறு வித யாகங்களாளும் ஆராதிக்கத்தகுந்தவனாய்; ஓர் ஐந்தும் பஞ்சமஹா யஜ்ஞங்களால் ஆராத்யானாய்; ஐந்தும் பஞ்ச ஆஹுதிகளால் ஆராத்யானாய்; ஐந்துமாய் பஞ்ச அக்னிகளையும் சரீரமாகக் கொண்டவனாய்; ஏறு சீர் மிக்க அதிசயிக்கத்தக்க; இரண்டும் அறிவு வைராக்யம் என்ற இரண்டையும் அளிக்க வல்லனாய்; மூன்றும் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற மூன்றையும் அளிக்க வல்லனாய்; ஏழும் விவேகாதிகள் முதலான சாதன சப்தகம் ஏழுக்கும் நிர்வாஹகனாய்; ஆறும் ஞாந பல ஐச்வர்ய வீர்ய சக்தி தேஜ: முதலிய ஆறு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; எட்டுமாய் பாபமற்றவன் (அபஹத பாப்மா) கிழத்தன்மை இல்லாதவன் (விஜரக) இறப்பில்லாதவன் (விமிருத்யுகு) சோகமில்லாதவன் (விசோகக) (விஜிகத்சக) பசி தாகமற்றவன் (அபிபாசக) நித்திய பொருள்களின் மேல் ஆசை கொண்டவன் (சத்ய காமக) (சத்ய சங்கல்பக) முதலிய எட்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; வேறு வேறு வேறு வேறு சமயங்களை உண்டாக்கினவனாய்; ஞானம் ஆகி புறச் சமயங்களுக்கும் அவனே ஆதியாய்; மெய்யினோடு ஞானிகளுக்கு மெய்யனாய்; பொய்யுமாய் அல்லாதார்க்குப் பொய்யனாய்; ஊறோடு ஓசையாய ஸ்பர்சம் சப்தம் ரூப ரஸ கந்தம்; ஐந்தும் ஆய ஆகிய ஐந்து விஷயங்களுமாய் ஆகி; ஆய மாயனே! கோபாலனாக வந்து பிறந்தவனே!