TCV 15

சாரங்க பாணி நீதான்

766 அங்கமாறும்வேதநான்கும் ஆகிநின்றவற்றுளே *
தங்குகின்றதன்மையாய்! தடங்கடல்பணத்தலை *
செங்கண்நாகணைக்கிடந்த செல்வமல்குசீரினாய் *
சங்கவண்ணமன்னமேனி சார்ங்கபாணியல்லையே?
766 aṅkam āṟum vetam nāṉkum * āki niṉṟu avaṟṟul̤e *
taṅkukiṉṟa taṉmaiyāy * taṭaṅkaṭal paṇattalai **
cĕṅkaṇ nākaṇaik kiṭanta * cĕlvam malku cīriṉāy *
caṅka vaṇṇam aṉṉa meṉi * cārṅkapāṇi allaiye? (15)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

766. You are the four Vedās, the six Upanishads and their meaning. You, the precious one rest on the wide ocean on many-headed Adishesha. Aren’t you the one with a white conch and the Sarngam bow?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கம் ஆறும் ஆறு அங்கங்களுக்கும்; வேதம் நான்கும் நான்கு வேதங்களுக்கும்; ஆகி நின்று நிர்வாஹகனாய்; அவற்றுளே அந்த வேதங்களினுள்ளே; தங்குகின்ற மறைபொருளாய்; தன்மையாய்! உள்ளவனே!; தடங்கடல் பாற்கடலிலே; பணத்தலை படங்களையுடைய; நாகணைக் ஆதிசேஷன் படுக்கையிலே; கிடந்த துயிலும்; செங்கண் சிவந்த கண்களையுடைய; செல்வம் மல்கு நிறைவான செல்வமுடையவனே; சீரினாய்! கல்யாணகுணங்களை உடையவனே!; சங்க வண்ணம் அன்ன சங்கின் வர்ணம் போன்ற; மேனி மேனியை உடையவனே!; சார்ங்கபாணி கையில் வில்லையும்; அல்லையே உடையவனன்றோ? நீ