TCV 14

சாமதேவ கீதன் நீ அல்லனோ!

765 தூய்மையோகமாயினாய்! துழாயலங்கல்மாலையாய்! *
ஆமையாகியாழ்கடல்துயின்ற ஆதிதேவ! * நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்லவாகிலும் *
சாமவேதகீதனாய சக்ரபாணியல்லையே?
765 tūymai yokam āyiṉāy * tuzhāy-alaṅkal mālaiyāy *
āmai āki āzhkaṭal tuyiṉṟa * ātiteva ** niṉ
nāmateyam iṉṉatu ĕṉṉa * vallam alla ākilum *
cāma veta kītaṉāya * cakrapāṇi allaiye? (14)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

765. You who are pure yoga and carry in your hands the Sarngam bow adorned with thulasi garlands are the ancient one who took the form of a turtle. You rest on the deep ocean. We do not know what your name is, but we say you are the creator of the SamaVedā and the Vedās praise you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூய்மை தூய்மையை; யோகம் ஆயினாய்! உண்டுபண்ணுபவனே!; துழாய் அலங்கல் துளசிமாலை; மாலையாய் அணிந்துள்ளவனே!; ஆமை ஆகி ஆழ்கடல் கூர்மமாய் ஆழ்கடலிலே; துயின்ற ஆதி தேவ! நின் துயின்றவனே! உன்னுடைய; நாமதேயம் பெயர்களுக்குள்ள; இன்னது என்ன சிறப்புகள் இன்னதென்று; வல்லம் அல்ல அளவிட்டுக் கூற திறமையுடையோம் அல்லோம்; ஆகிலும் ஆனாலும்; சாம வேத கீதனாய சாமவேதத்திலே சொல்லப்பட்ட; சக்ரபாணி சக்ரபாணியாக சூரியமண்டலத்தில்; அல்லையே இருப்பவன் அன்றோ? நீ