TCV 118

திருமகள் கொழுநனையே நினைப்பேன்

869 சொல்லினும்தொழிற்கணும் தொடக்கறாதஅன்பினும் *
அல்லுநன்பகலினோடும் ஆனமாலைகாலையும் *
வல்லிநாண்மலர்க்கிழத்திநாத! பாதபோதினை *
புல்லியுள்ளம்விள்விலாது பூண்டுமீண்டதில்லையே.
869 cŏlliṉum tŏzhiṟkaṇum * tŏṭakku aṟāta aṉpiṉum *
allum naṉ pakaliṉoṭum * āṉa mālai kālaiyum **
valli nān-malark kizhatti * nāta pāta-potiṉai *
pulli ul̤l̤am vil̤vu ilātu * pūṇṭu mīṇṭatu illaiye (118)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

869. O lord, beloved of Lakshmi, I worshipped you with my words and in my deeds and loved you unceasingly, night and day, morning and evening. My heart worshiped your lotus feet and now it stays with you and will never come back to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லி நாள் மலர் அன்று பூத்த தாமரைப்பூவிலே பிறந்த; கிழத்தி நாத! திருமகளின் நாதனே!; உள்ளம் எனது நெஞ்சானது; சொல்லினும் வாக்கிலும்; தொழிற்கணும் செயலிலும்; தொடக்குஅறாத தொடர்ச்சி மாறாத; அன்பினும் பக்தியிலும்; அல்லும் இரவோடு கூடின; நன் பகலினோடும் ஸாயங்காலமும்; ஆன மாலை நல்ல பகலோடு கூடின; காலையும் காலையும்; பாத போதினை உன்னுடைய பாத கமலத்தை; புல்லி விள்வு இலாது பற்றி இடைவிடாது; பூண்டு ஈடுபட்டு அதனின்று; மீண்டது இல்லையே மீண்டது இல்லை