TCV 115

மனமே! ஏன் இடர்க்கடலில் கிடக்கிறாய்?

866 அத்தனாகியன்னையாகி ஆளுமெம்பிரானுமாய் *
ஒத்தொவ்வாதபல்பிறப்பொழித்து நம்மையாட்கொள்வான் *
முத்தனார்முகுந்தனார் புகுந்துநம்முள்மேவினார் *
எத்தினால்இடர்க்கடல்கிடத்தி? ஏழைநெஞ்சமே! (2)
866 ## attaṉ āki aṉṉai āki * āl̤um ĕm pirāṉumāy *
ŏttu ŏvvāta pal piṟappu ŏzhittu * nammai āṭkŏl̤vāṉ **
muttaṉār mukuntaṉār * pukuntu nammul̤ meviṉar *
ĕttiṉāl iṭarkkaṭal kiṭatti * ezhai nĕñcame! (115)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

866. Our ruler and our mother, he destroys all our births, makes us his devotees and gives us his grace. O poor heart! He is Mukundan, the ancient one. If we worship him he will enter us, stay with us and remove our ocean of sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முத்தனார் ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்; முகுந்தனார் மோக்ஷம் அளிப்பவருமான பெருமாயன்; ஒத்து ஞானத்தால் ஒத்தும்; ஒவ்வாத பிறப்பால் ஒவ்வாமலும் இருக்கிற; பல்பிறப்பு பலவகைப்பட்ட ஜன்மங்களை; ஒழித்து போக்கி; நம்மை நம்மை; ஆட்கொள்வான் அடிமை கொள்வதற்காக; அத்தன்ஆகி பிதாவாயும்; அன்னை ஆகி மாதாவாயும்; ஆளும் அடிமைகொள்ளும்; எம்பிரானுமாய் ஸ்வாமியாயும்; புகுந்து நம்முள் நம்மிடத்திலே புகுந்து; மேவினார் பொருந்தி விட்டான்; ஏழை நெஞ்சமே! மதிகெட்ட மனமே!; எத்தினால் எதற்காக; இடர்க்கடல் துக்கஸாகரத்திலே; கிடத்தி அழுந்திக் கிடக்கிறாய்