112-பாட்டு –
அவதாரிகை –
கீழ் இரண்டு பாட்டாலே -இத்தலையில் குற்றத்தை பொறுக்க வேணும் என்று ஷாபணம் பண்ணி -அக் குற்றங்களை குணமாக கொள்ள வேணும் என்றார் – இப்பாட்டில் -(நெஞ்சுக்கு உபதேசம் பாடல் 1 இது ) திரு உள்ளத்தை குறித்து -ஆயுஸூ எனக்கு இன்ன போது முடியும் என்று தெரியாது –
அவன் திருவடிகளில் வணங்கி வாழ்த்தி கால ஷேபம் பண்ணப் பார் -என்கிறார் –
**வாள்களாக நாள்கள்