TCV 111

செய்த குற்றம் நற்றமாகவே கொள்

862 வைதுநின்னைவல்லவா பழித்தவர்க்கும், மாறில்போர் *
செய்துநின்னைசெற்றதீயில் வெந்தவர்க்கும், வந்துன்னை *
எய்தலாகுமென்பர் ஆதலால், எம்மாய! நாயினேன் *
செய்தகுற்றம்நற்றமாகவேகொள் ஞாலநாதனே!
862 vaitu niṉṉai vallavā * pazhittavarkkum māṟil por *
cĕytu niṉṉa cĕṟṟat tīyil * vĕntavarkkum vantu uṉṉai **
ĕytal ākum ĕṉpar * ātalāl ĕm māya nāyiṉeṉ *
cĕyta kuṟṟam naṟṟamākave kŏl̤ * ñāla-nātaṉe (111)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

862. You are the lord of the world. Sages say that even they who slander you like Sisupalan or fight with you like Rāvana in Lankā have reached your world and joined with you by your grace O Māyan. Take the mistakes that I, as low as a dog, do as good deeds and forgive me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்னை வல்லவா தங்களை முடிந்த அளவு; வைது பழித்தவர்க்கும் நிந்தித்த சிசுபாலனுக்கும்; மாறில் போர் செய்து ஒப்பற்ற யுத்தம்பண்ணி; நின்ன செற்ற தீயில் தங்களின் கோபாக்நியில்; வெந்தவர்க்கும் வெந்துபோன வாலி முதலானோர்க்கும்; உனை வந்து உன்னை வந்து; எய்தல் ஆகும் அடைவது இயலும்; என்பர் என்று மஹரிஷிகள் கூறுகின்றனர்; ஆதலால் எம் மாய! அதனால் எம்பெருமானே!; ஞால நாதனே! உலகத்திலுள்ளவர்களுக்கு நாதனே!; நாயினேன் நீசனான நான்; செய்த குற்றம் செய்த குற்றங்களை; நற்றமாகவே கொள் குணமாகவே கொள்ள வேண்டும்