TCV 110

பக்தர் சித்தம் மேவியவன்

861 தூயனாயுமன்றியும் சுரும்புலாவுதண்துழாய் *
மாய! நின்னைநாயினேன் வணங்கிவாழ்த்துமீதெலாம் *
நீயுநின்குறிப்பினில் பொறுத்துநல்கு, வேலைநீர் *
பாயலோடுபத்தர்சித்தம்மேய வேலைவண்ணனே!
861 tūyaṉāyum aṉṟiyum * curumpu ulāvu taṇ tuzhāy *
māya niṉṉai nāyiṉeṉ * vaṇaṅki vāzhttum ītĕlām **
nīyum niṉ kuṟippiṉil * pŏṟuttu nalku velai-nīr *
pāyaloṭu pattar cittam * meya velai vaṇṇaṉe (110)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

861. You, Māyan, the pure one wearing a cool thulasi garland that swarms with bees, I, a dog, bow to you and worship you. who are colored like the ocean and rest on the water of the sea. You enter the thoughts of your devotees. Forgive all my faults and give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுரும்பு வண்டுகள்; உலாவு தண் உலாவுகின்ற குளிர்ந்த; துழாய் மாய! துளசி மாலையணிந்த மாயனே!; வேலை நீர் திருப்பாற்கடலாகிற; பாயலோடு படுக்கை யோடுகூட; பத்தர் பக்தர்களுடைய; சித்தம் மேய மனதில் வஸிக்கும்; வேலை வண்ணனே! கடல் வண்ணனே!; நாயினேன் நீசனான நான்; தூயனாயும் பரிசுத்தனாகவோ; அன்றியும் பரிசுத்தனல்லாதவனாகவோ; நின்னை வணங்கி தங்களை வணங்கி; வாழ்த்தும் துதிப்பதாகிற; ஈதெலாம் இதனையெல்லாம்; நீயும் தேவரீரும்; நின் குறிப்பினில் தங்களுடைய திருஉள்ளத்திலே; பொறுத்து நல்கு மன்னித்தருள வேண்டும்