TCV 109

முனிவர்கள் உன்னையே தேவதேவன் என்பர்

860 சுருக்குவாரையின்றியே சுருங்கினாய், சுருங்கியும் *
பெருக்குவாரையின்றியே பெருக்கமெய்துபெற்றியோய்! *
செருக்குவார்கள்தீக்குணங்கள் தீர்த்ததேவதேவனென்று *
இருக்குவாய்முனிக்கணங்களேத்த யானுமேத்தினேன்.
860 curukkuvārai iṉṟiye * curuṅkiṉāy curuṅkiyum *
pĕrukkuvārai iṉṟiye * pĕrukka mĕytu pĕṟṟiyoy **
cĕrukkuvārkal̤ tīkkuṇaṅkal̤ * tīrtta tevatevaṉ ĕṉṟu *
irukku vāy muṉik kaṇaṅkal̤ etta * yāṉum ettiṉeṉ (109)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

860. You became a dwarf even though no one made you small, and, without anyone making you bigger, you became tall even though no one made you tall and touched the sky. All the sages recite the Vedās, praise you and say that you are the god of gods and you destroy the evil of the proud, and I join them in your praise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுருக்குவாரை சுருங்குவதற்கு எந்தக் காரணமும்; இன்றியே இன்றியே; சுருங்கினாய் வாமனாகச் சுருங்கின பெருமானே!; சுருங்கியும் அப்படி சுருங்கி இருந்த போதும்; பெருக்குவாரை பெருகச்செய்யும் காரணம்; இன்றியே இன்றியே; பெருக்கமெய்து திருவிக்ரமனாக வளர்ச்சி அடைந்த; பெற்றியோய் பெருமானே!; செருக்குவார்கள் மஹாபலி போன்றோரின்; தீக்குணங்கள் தீய குணங்களை; தீர்த்த போக்கின; தேவதேவன் என்று தேவதேவனே! என்று இப்படி; இருக்கு வாய் வேதங்களும்; முனிக்கணங்கள் முனிவர்களும்; ஏத்த யானும் ஏத்தினேன் துதிக்க நானும் துதிக்கிறேன்