TCV 105

நின்னையே யான் எண்ணுவேன்

856 மண்ணையுண்டுமிழ்ந்து பின்இரந்துகொண்டளந்து * மண்
கண்ணுளல்லதில்லையென்று வென்றகாலமாயினாய்! *
பண்ணைவென்றவின்சொல்மங்கை கொங்கைதங்குபங்கயக்
கண்ண! * நின்னவண்ணமல்லதில்லை எண்ணும்வண்ணமே.
856 maṇṇai uṇṭu umizhntu piṉ * irantu kŏṇṭu al̤antu maṇ *
kaṇṇul̤ allatu illai ĕṉṟu * vĕṉṟa kālam āyiṉāy **
paṇṇai vĕṉṟa iṉcŏl maṅkai * kŏṅkai taṅku paṅkayak
kaṇṇa * niṉṉa vaṇṇam allatu illai * ĕṇṇum vaṇṇame (105)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

856. You swallowed the earth, and you begged for land and took it from Mahābali, measuring it till there was no place you had not taken. O lord with lotus eyes who embrace the woman whose sweet words surpass music, there is no other color like your color.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணை பூமியை; உண்டு பிரளயகாலத்திலே விழுங்கி; பின் பிறகு சிருஷ்டி காலத்தில்; உமிழ்ந்து வெளிப்படுத்தி; இரந்து மஹாபலியிடத்தில் யாசித்து; கொண்டு பெற்று; அளந்து திருவிக்கிரமனாய்; மண் அளந்துகொண்டு; வென்ற காலம் அனைவரையும்; ஆயினாய் வென்றவனாய்; கண்ணுள் அல்லது நானே; இல்லை என்று அனைத்துமானவன் என்று; பண்ணை வென்ற இசையை வென்ற; இன்சொல் மங்கை இனிமையாகப் பேசும்; கொங்கை தங்கு மஹலக்ஷ்மியைப் பிரியாத; பங்கய கண்ண தாமரைக்கண்ணனே!; நின்ன வண்ணம் அல்லது உன் வடிவழகு தவிர; எண்ணும் வண்ணம் தியானிக்கக்கூடிய வடிவு; இல்லை வேறில்லை