தனியன் / Taniyan

சிறியதிருமடல் தனியன்கள் / Siriya Thirumaḍal taṉiyaṉkal̤

முள்ளிச் செழுமலரோ தாரான் முளை மதியம் *
கொல்லிக் கென்னுள்ளங் கொதியாமே *- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி *
மருவாளன் தந்தான் மடல்

mul̤l̤ic cĕḻumalaro tārāṉ mul̤ai matiyam *
kŏllik kĕṉṉul̤l̤aṅ kŏtiyāme *- val̤l̤al
tiruvāl̤aṉ cīrkkaliyaṉ kārkkaliyai vĕṭṭi *
maruvāl̤aṉ tantāṉ maṭal
பிள்ளை திருநறையூர் அறையர் / pil̤l̤ai tirunaṟaiyūr aṟaiyar

Word by word meaning

கார்கலியை வெட்டி அஞ்ஞானத்தை ஒழித்தவருமான; செழு முள்ளி செழிப்பான முள்ளி; மலரோ மலர்களாலான ஒப்பற்ற; தாரான் மாலை அணிந்து கொண்டிருப்பவரும்; வள்ளல் பல பிரபந்தங்களை அருளிய வள்ளலும்; திருவாளன் மிகுந்த பக்தி உடையவரும்; மருவாளன் சிறந்த வாளை உடையவரும்; சீர்கலியன் திருமங்கை ஆழ்வார்; முளைமதியம் உதிக்கும் சந்திரனைப் பார்த்து; கொள்ளிக்கு விரஹ தாபம் அடைந்தவர், நெருப்போ; என் உள்ளம் என்று மனம்; கொதியாமே வருந்த வேண்டாதபடி; மடல் சிறிய திருமடல் என்னும் பிரபந்தத்தை; தந்தான் அருளிச்செய்தார்