STM 9

குறி கேட்க முயலுதல்

2681 - அதனாலும்
தீராதுஎன்சிந்தைநோய் தீராதுஎன்பேதுறவு *
வாராதுமாமை அதுகண்டுமற்றாங்கே *
ஆரானும்மூதறியும் அம்மனைமார்ச்சொல்லுவார் *
பாரோர்சொலப்படும் கட்டுப்படுத்திரேல் *
ஆரானும்மெய்படுவனென்றார் *
2681 ataṉālum
tīrātu ĕṉ cintai noy tīrātu ĕṉ petuṟavu *
vārātu māmai atu kaṇṭu maṟṟu āṅke *
ārāṉum mūtu aṟiyum ammaṉaimār cŏlluvār *
pāror cŏlappaṭum kaṭṭuppaṭuttirel *
ārāṉum mĕyppaṭuvaṉ ĕṉṟār * -9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2681. “But whatever my mother did, it didn’t remove the sorrow from my mind or the pain of my love. Some older mothers who saw how I suffered how my body grew pale advised her, ‘Take her to a fortune teller who can tell you how to remove her sickness. She may tell you the truth. ’ 9

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அதனாலும் அப்படிச்செய்தும்; தீராது என் சிந்தை நோய் என் மனோவியாதி தீரவில்லை; தீராது என் பேதுறவு பித்தான தன்மையும் மாறவில்லை; வாராது மாமை மாமை நிறமும் மீளவில்லை; அது கண்டு மற்று ஆங்கே மேலும் அது கண்டு அங்கிருந்த; ஆரானும் மூது அறியும் யாரோ சில பழம்; அம்மனைமார் பாட்டிமார்கள்; சொல்லுவார் என்ன சொன்னார்கள் என்றால்; பாரோர் குறி கேட்பதென்று உலகத்தார் ஒன்று; சொலப்படும் சொல்வதுண்டு; கட்டுப்படுத்திரேல் அதைச்செய்தீர்களாகில்; ஆரானும் நோய் யாரால் வந்தது என்ற; மெய்படுவன் உண்மை தெரிந்துவிடும்; என்றார் என்று அவர்கள் சொல்ல
adhanālum en sindhai nŏy thīrādhu despite that, my mental illness has not been cured.; en pĕdhuṛavu thīrādhu my distress [bewilderment] too has not been cured.; māmai vārādhu the colour of my form, which ī lost, has not returned.; maṝu further; āngĕ ārānum mūdhu aṛiyum ammanaimār some old women who were there, familiar with stories of old [happenings of past]; adhu kaṇdu looking at my state; solluvār started speaking (to provide means for overcoming my disease).; pārŏr solappadum kattuppaduththir ĕl ārānum meyppaduvan enṛār they (old women) said “ṭhere is a practice called as fortune-telling [predicting as to what will happen in future], among the people. īf you carry this out, whoever (had created this disease) would be revealed truthfully”.