STM 15

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2687 - வயிறடித்திங்கு
ஆரார்புகுதுவார்? ஐயரிவரல்லால் *
நீராமிதுசெய்தீர் என்றோர்நெடுங்கயிற்றால் *
ஊரார்களெல்லாரும் காணவுரலோடே *
தீராவெகுளியளாய்ச் சிக்கெனவார்த்தடிப்ப *
ஆராவயிற்றினோடு ஆற்றாதான் *
2687 vayiṟu aṭittu iṅku
ār ār pukutuvār aiyar ivar allāl *
nīr ām itu cĕytīr ĕṉṟu or nĕṭuṅ kayiṟṟāl *
ūrārkal̤ ĕllārum kāṇa uraloṭe *
tīrā vĕkul̤iyal̤ āyc cikkĕṉa ārttu aṭippa *
ārā vayiṟṟiṉoṭu āṟṟātāṉ * -15

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2687. “‘She hit herself on her stomach and said, “Who could have done this except this naughty one?” She asked Kannan, “Did you do this?” She got very angry, shouted at him, took a long rope, tied him to the mortar and spanked him as the villagers looked on. He didn’t stop her. 15

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வயிறு இத்தனை தின்றால்; அடித்து ஜீர்ணமாகுமா என்று வயிறடித்து; இங்கு வருந்தினாள்; ஐயர் இவர் அல்லால் இந்த ஐயனைத் தவிர; ஆர் ஆர் புகுதுவார் வேறு யார் இங்கு வந்தனர்; இது செய்தீர் இந்தக் காரியம் செய்தவர்; நீராம் நீர்தான்; என்று என்று சொல்லி; ஓர் நெடும் கையிலகப்பட்டதொரு நெடும்; கயிற்றால் கயிற்றால்; ஊரார்கள் ஊரிலுள்ளோர்; எல்லாரும் அனைவரும்; காண காணும்படியாக; உரலோடே உரலோடு சேர்த்துக் கட்டி; தீரா வெகுளியன் ஆய் கோபமுடையவளாக; சிக்கென ஆர்த்து இழுத்துப் பிடித்து; அடிப்ப அடிக்கவும்; ஆரா வயிற்றினோடு மிகவும் வயிறெரிந்து; ஆற்றாதான் வருந்தி நின்றான்
vayiṛu adiththu beating herself on her stomach (wondering if eating this amount of butter would lead to indigestion for kaṇṇa); aiyar ivar allāl̤ other than this great person; ingu pugudhuvar ār ār who else can enter this place?; idhu seydhīr nīrām enṛu saying ‘only you have done this’; thīrā vegul̤iyal̤āy with uncontrolled anger; ŏr nedu kayiṝāl with a short rope that her hands could reach out to; ūrārgal̤ellām kāṇa (such simplicity) to be seen by all the people in the village; uralŏdĕ to a [grinding] mortar; chikkena ārththu adippa to tie down firmly and beat; ārā vayiṝinŏdu āṝādhān one who stood with sorrow and his stomach hurting