STM 12

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2684 - திருத்துழாய்த்
தாரார்நறுமாலை கட்டுரைத்தாள்கட்டுரையா *
நீரேதுமஞ்சேன்மின் நும்மகளைநோய்செய்தான் *
ஆரானுமல்லன் அறிந்தேன்அவனைநான் *
கூரார்வேற்கண்ணீர்! உமக்கறியக்கூறுகேனோ? *
ஆரால்இவ்வையம் அடியளப்புண்டதுதான்? *
ஆரால்இலங்கை பொடிபொடியாவீழ்ந்தது? * - மற்று
ஆராலே கன்மாரிகாத்ததுதான்? *
2684 tirut tuzhāyat
tār ār naṟu mālai kaṭṭuraittāl̤ kaṭṭuraiyā *
nīr etum añcelmiṉ num makal̤ai noy cĕytāṉ *
ārāṉum allaṉ aṟinteṉ avaṉai nāṉ *
kūr ār vel kaṇṇīr umakku aṟiyak kūṟukeṉo? *
ārāl iv vaiyam aṭi al̤appuṇṭatu tāṉ *
ārāl ilaṅkai pŏṭi pŏṭiyā vīzhntatu * maṟṟu
ārāle kal māri kāttatu tāṉ * -12

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2682

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருத் துழாய் துளசி நிறைந்த; தார் ஆர் நறு மாலை மணம் மிக்க மாலையையும்; கட்டுரைத்தாள் அபிநயித்துக் காட்டினாள்; கட்டுரையா இதற்குப்பின் அவள் கூறியது; நீர் ஏதும் நீங்கள் சிறிதும்; அஞ்சேல்மின் பயப்பட வேண்டாம்; நும் மகளை உங்கள் பெண்ணை; நோய் செய்தான் இப்படி நோவு படுத்தினவன்; ஆரானும் அல்லன் தாழ்ந்த தேவதை அல்ல; அவனை அவன் யார்; நான் அறிந்தேன் என்பதை நான் அறிந்தேன்; கூர் ஆர் வேல் கூரிய வேல் போன்ற; கண்ணீர் கண்களையுடையவர்களே!; உமக்கு நீங்கள் அறியும்படி; அறிய அவன் யார் என்று; கூறுகேனோ உங்களுக்குக் கூறுகிறேன்; ஆரால் இவ் வையம் யாரால் இந்த உலகம்; அடி அளப்புண்டது தான் அளக்கப்பட்டதோ; ஆரால் இலங்கை இலங்கை யாரால்; பொடி பொடியா பொடிபொடியாக ஆக்கி; வீழ்ந்தது மற்று அழிக்கப்பட்டதோ மேலும்; ஆராலே கல் மாரி யாரால் கல்மழை தடுக்கப்பட்டு; காத்தது தான் பசுக்கள் காப்பாற்றப்ட்டதோ
thiru thuzhāy thār ār naṛumālai katturaiththāl̤ she showed through gestures, the fragrant garland made with divine thul̤asi flowers; katturaiyā thus, having shown all these through gestures (she said through spoken words); nīr ĕdhum anjĕlmin “ẏou do not have to be afraid”; num magal̤ai nŏy seydhān the one who had caused (this) disease for your daughter; ārānum allan he is not some lowly deity; avanai nān aṛindhĕn ī have found out as to who is that person (who had hurt parakāla nāyagi); kūr ār vĕl kaṇṇīr ŏh women, who have eyes as sharp as a spear!; umakku aṛiya kūṛugĕnŏ ṣhall ī inform you (about him)?; i vaiyam ārāl adi al̤appu uṇdadhu by whom this earth was measured; ilangai ārāl podipodi ā vīzhndhadhu by whom was lankā blown to smithereens and destroyed?; ārālĕ kal māri kāththadhu by whom was the hailstorm prevented