RNA 66

சரண் கொடுத்து வானம் கொடுப்பவன் இராமானுசன்

3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு * நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் ** வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கு * அத்
தானம் கொடுப்பது * தன்தக வென்னும் சரண்கொடுத்தே.
3958 ñāṉam kaṉinta nalam kŏṇṭu * nāl̤tŏṟum naipavarkku
vāṉam kŏṭuppatu mātavaṉ ** valviṉaiyeṉ maṉattil
īṉam kaṭinta irāmānucaṉ taṉṉai ĕytiṉarkku * at
tāṉam kŏṭuppatu * taṉ takavu ĕṉṉum caraṇ kŏṭutte (66)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3958. Mādhavan gives Mokshā to his devotees as they become ever wiser. I have done bad karmā. I pray that Rāmānujā will remove the faults of my heart and give me his grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாதவன் எம்பெருமான்; வானம் கொடுப்பது மோக்ஷம் அளிப்பது யாருக்கு என்றால்; ஞானம் கனிந்த ஞானம் பக்தி ரூபமாகி; நலம் கொண்டு அந்த பக்தியினால்; நாள்தொறும் தினமும்; நைபவர்க்கு உருகுகிறவர்களுக்கே; வல்வினையேன் மஹாபாபியான அடியேன்; மனத்தில் மனத்திலிருந்து; ஈனம் கடிந்த தோஷங்களைப் போக்கி; இராமாநுசன் இராமாநுசன்; தன்னை எய்தினர்க்கு தம்மைப் பற்றினவர்களுக்கு; அத்தானம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த மோக்ஷம்; கொடுப்பது கொடுப்பது; தன் தகவு என்னும் தம் கிருபையாலே; சரண் கொடுத்தே கொடுத்தருள்கிறார்
mādhavan sarvĕṣvaran, the husband of ṣrī (lakshmī),; vānam koduppadhu gives mŏksham; gyānam kanindha ((only) to the ones having) maturity of knowledge; nalam koṇdu that is, love (towards ḥim),; naibavarkku decay/distraught; nāl̤ thoṛum every day;; irāmānusan thannai emperumānār who; eenam kadindha removed the defects; manaththil in the mind of; val vinaiyĕn me who is the greatest sinner,; ath thānam koduppadhu gives that position (sthānam) in the sky (ṣrīvaikuṇtam); eydhinarkku to those who surrender (to him),; koduththu by giving them as wealth; than his; thagavu ennum what is said as kindness; charaṇ as the means.