பெரிய ஜீயர் அருளிய உரை – நாற்பத்து நாலாம் பாட்டு அவதாரிகை இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக் கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே