போர் வேந்தன் – ஆண் புலி – ரணமுக ராமன் – சக்ரவர்த்தியைக் கட்டி வைத்து ராஜ்ஜியம் பண்ண வல்ல மிடுக்கு – ஸ்ரீ பரத ஆழ்வான் தோஷ பிரகரணத்திலே ந ச ராகவச்ய -என்று சப்த சாலங்களையும் ஓர் அம்பாலே உருவ எய்தவர் இத்தைச் செய்திலர் என்று கருத்து –
தன்னுடைய தாதை பணியால் – சக்கரவர்த்தி ஹிருதயம் பாராதே உக்தி மாத்ரத்திலே –
அரசொழிந்து- அரசு ஒழிந்து – வாடல் மாலையைப் பொகடுவாரைப்