2713 ## மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் *
சென்னி மணிக் குடுமி தெய்வச் சுடர் நடுவுள் **
மன்னிய அந்நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல் *
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச *
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் * 1
2713 ## maṉṉiya pal pŏṟi cer āyira vāy vāl̤ araviṉ *
cĕṉṉi maṇik kuṭumi tĕyvac cuṭar naṭuvul̤ **
maṉṉiya an nākattu aṇaimel or mā malai pol *
miṉṉum maṇi makara kuṇṭalaṅkal̤ vil vīca *
tuṉṉiya tārakaiyiṉ per ŏl̤i cer ākācam * 1