PTM 1.1 2713 ## மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் * சென்னி மணிக் குடுமி தெய்வச் சுடர் நடுவுள் ** மன்னிய அந்நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல் * மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச * துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் * 1
PTM 1.2 2714 என்னும் விதானத்தின் கீழால் * இரு சுடரை மன்னும் விளக்கு ஆக ஏற்றி * மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச * நிலமங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் * மன்னிய சேவடியை 2