பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

எங்கள் கதியே! இராமானுச முனியே! *
சங்கை கெடுத்தாண்ட தவராசா! *
பொங்கு புகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும் *
தங்கு மனம் நீ யெனக்குத்தா

eṅgaḻ kadiyē ! irāmānuja muniyē ! ⋆
śaṅgai keḍuttāṇḍa tavarāśā⋆ poṅgu pugaz
maṅgaiyar kōn īnda maṟai āyiram anaittum⋆
taṅgu manam nī enakku ttā
எம்பார் / ĕmpār
YengalGadiyeh

Word by word meaning

எங்கள் கதியே! எங்களுக்குப் புகலிடம் போன்றவரே!; இராமானுச முனியே! இராமானுச முனிவரே!; சங்கை ஸந்தேகங்களை; கெடுத்து ஆண்ட போக்கி காப்பாற்றிய; தவ ராசா! மகா தபஸ்வியே!; பொங்கு புகழ் உலகெங்கும் பரவிய புகழுடையவரான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வார்; ஈந்த தந்து அருளின; மறை ஆயிரம் வேத ரூபமான திருமொழி ஆயிரத்தையும்; அனைத்தும் மற்றுமுள்ள எல்லா பிரபந்தங்களையும்; தங்கு மனம் தரிக்கக்கூடிய மனதையும்; நீ எனக்குத் தா தாங்களெ தந்து அருள வேண்டும்; இராமானுசரிடம் எம்பாரின் பிரார்த்தனை