தனியன் / Taniyan
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி: ஆவித்யம் நிஹதம் தம:
kalayāmi kalidhvaṃsaṃ kaviṃ lōkadivākaram
yasya gōbhiḥ prakāśābhirāvidyaṃ nihataṃ tamaḥ
திருக்கோட்டியூர் நம்பி
PT.T-1-2
Kalayaami
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
வாழி பரகாலன் வாழி கலிகன்றி *
வாழி குறையலூர் வாழ் வேந்தன் - வாழியரோ *
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் *
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்
vāzi paragālan vāzi kaliganṟi⋆
vāzi kuṟaiyalūr vāz vēndan ⋆ vāziyarō
māyōnai vāḻvaliyāl mandiraṅgoḻ⋆
maṅgaiyar kōn tūyōn śuḍarmāna vēl
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār
VaazhiParakalan
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லவமுதம் *
தமிழ் நன்நூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரண சாரம் *
பரசமயப் பஞ்சுக்கனலின் பொரி *பரக்காலன் பனுவல்களே
neñjukkiruḻ kaḍi tīpam aḍaṅgā neḍum piṟavi⋆
nañjukku nalla amudam tamiz nannūl tuṟaigaḻ ⋆
añju kkilakkiyam āraṇa śāram⋆ paraśamaya
ppañju kkanalin poṟi ⋆ paragālan panuvalgaḻē
ஆழ்வான் / āḻvāṉ
PT.T-3-4
Nenjukku
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
எங்கள் கதியே! இராமானுச முனியே! *
சங்கை கெடுத்தாண்ட தவராசா! *
பொங்கு புகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும் *
தங்கு மனம் நீ யெனக்குத்தா
eṅgaḻ kadiyē ! irāmānuja muniyē ! ⋆
śaṅgai keḍuttāṇḍa tavarāśā⋆ poṅgu pugaz
maṅgaiyar kōn īnda maṟai āyiram anaittum⋆
taṅgu manam nī enakku ttā
எம்பார் / ĕmpār
YengalGadiyeh
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று *
கோலிப்பத விருந்த் கொற்றவனே! *
வேலை அணைத்தருளுங்கையாலடியேன் வினையை *
துணித் தருள வேணும் துணிந்து
mālait taṉiye vaḻi paṟikka veṇumĕṉṟu *
kolippata virunt kŏṟṟavaṉe! *
velai aṇaittarul̤uṅkaiyālaṭiyeṉ viṉaiyai *
tuṇit tarul̤a veṇum tuṇintu
எம்பார் / ĕmpār
PT.T-5