PT 9.2.8

கருட வாகனர் வந்தார்: யாவரும் பாருங்கள்

1765 மஞ்சுயர்மாமதிதீண்டநீண்ட
மாலிருஞ்சோலைமணாளர்வந்து * என்
நெஞ்சுள்ளும்கண்ணுள்ளும்நின்றுநீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் *
மஞ்சுயர்பொன்மலைமேலெழுந்த
மாமுகில்போன்றுளர்வந்துகாணீர் *
அஞ்சிறைப்புள்ளுமொன்றுஏறிவந்தார்
அச்சோஒருவரழகியவா!
1765 mañcu uyar mā mati tīṇṭa nīṇṭa *
māliruñcolai maṇāl̤ar vantu * ĕṉ
nĕñcul̤l̤um kaṇṇul̤l̤um niṉṟu nīṅkār *
nīrmalaiyārkŏl? niṉaikkamāṭṭeṉ **
mañcu uyar pŏṉmalaimel ĕzhunta *
mā mukil poṉṟu ul̤ar vantu kāṇīr *
am ciṟaip pul̤l̤um ŏṉṟu eṟi vantār- *
acco ŏruvar azhakiyavā-8

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1765. She says about the lord of Thirunāgai, He, my beloved, the god of Thirumālirunjolai where tall trees in the groves of Thirumālirunjolai touch the beautiful moon that floats on a cloud, came and entered my eyes and my heart and does not leave me. Is he the lord of Thiruneermalai? He looks like a dark cloud rising above a golden mountain where clouds float. He came riding on Garudā, the bird with beautiful wings. I don’t know who he is. Come, see him. Acho, how can I describe his beauty!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மஞ்சு உயர் மா மதி மேகமண்டலத்து சந்திரனை; தீண்ட நீண்ட தொடுமளவு உயர்ந்த; மாலிருஞ் சோலை திருமாலிருஞ் சோலையில்; மணாளர் வந்து என் இருக்கும் பெருமான் என்; நெஞ்சுள்ளும் நெஞ்சுள்ளும்; கண்ணுள்ளும் கண்ணுள்ளும் வந்து; நின்று நின்று; நீங்கார் இருக்கிறார்; நீர் திருநீர்மலை; மலையார்கொல்? எம்பெருமானோ இவர்?; நினைக்க என்னால் உள்ளபடி; மாட்டேன் உணர முடியவில்லை; அம் சிறைப் அழகிய சிறகுகளை உடைய; புள்ளும் ஒன்று பறவையான கருடன் மேல்; ஏறி வந்தார் ஏறி வந்தார்; மஞ்சு உயர் மேகமண்டலத்தளவும் உயர்ந்த; பொன் மலை பொன் மலை; மேல் எழுந்த மேல் எழுந்த; மா முகில் போன்று பெரிய மேகம் போன்று; உளர் இருக்கிறார்; வந்து காணீர்! வந்து பாருங்கள்!; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோ ஆவர் என்னவென்று கூறுவேன்!