PT 9.2.6

கம்சனை வதைத்த காளையைக் கண்டேன்

1763 வெஞ்சினவேழம்மருப்பொசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார்மனத்தை *
தஞ்சுடையாளர்கொல்? யான்அறியேன்
தாமரைக்கண்கள்இருந்தவாறு *
கஞ்சனையஞ்சமுன்கால்விசைத்த
காளையாரவர், கண்டார்வணங்கும் *
அஞ்சனமாமலையேயும்ஒப்பர்
அச்சோஒருவரழகியவா!
1763 vĕm ciṉa vezha maruppu ŏcitta *
ventarkŏl? entizhaiyār maṉattai *
tañcu uṭaiyāl̤arkŏl? yāṉ aṟiyeṉ *
tāmaraik kaṇkal̤ irunta āṟu **
kañcaṉai añca muṉ kāl vicaitta *
kāl̤aiyar āvar kaṇṭār vaṇaṅkum *
añcaṉa mā malaiyeyum ŏppar- *
acco ŏruvar azhakiyavā-6

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1763. She says about the lord of Thirunāgai, “Did he, the king with lovely lotus eyes break the tusks of the angry elephant Kuvalayabeedam? Did he take shelter in the mind of girls adorned with ornaments? I don’t know him. Did he, the bull-like god, threaten Kamsan with his divine feet? When people see him, they wonder at his form that is like a huge black mountain and they worship him. Acho, how can I describe his beauty!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெம் சின சினம் கொண்ட சீறிய; வேழம் குவலயாபீட யானையின்; மருப்பு ஒசித்த கொம்பை முறித்த; வேந்தர் கொல்? பெருமானோ இவர்?; ஏந்திழையார் ஆபரணங்கள் அணிந்த; மனத்தை பெண்களின் மனத்தை; தஞ்சு தஞ்சமாக; உடையாளர் கொல்? உடையவரோ? இவர்; யான் அறியேன் நான் அறியேன்; தாமரைக் தாமரை போன்ற; கண்கள் கண்கள் இருந்தவாறு என்னே!; கஞ்சனை கம்ஸன்; அஞ்ச பயப்படும்படியாக; முன் கால் காலின்; விசைத்த வலிமையைக் காட்டின; காளையர் ஆவர் காளையர் ஆவர்; அஞ்சன மா பெரிய ஒரு அஞ்சன; மலையேயுமொப்பர் மலை போலிருக்கும் இவர்; கண்டார் பார்ப்பவர்கள்; வணங்கும் வணங்குவதற்கு உரியவராக உள்ளார்; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோ ஆவர் என்னவென்று கூறுவேன்!