PT 9.2.4

சங்கு சக்கரதாரியின் அழகு தான் என்னே!

1761 வம்பவிழும்துழாய்மாலைதோள்மேல்
கையன ஆழியும்சங்கும்ஏந்தி *
நம்பர்நம்இல்லம்புகுந்துநின்றார்
நாகரிகர்பெரிதும்இளையர் *
செம்பவளம்இவர்வாயின்வண்ணம்
தேவரிவரதுஉருவம்சொல்லில் *
அம்பவளத்திரளேயும்ஒப்பர்
அச்சோஒருவரழகியவா!
1761 vampu avizhum tuzhāy mālai tol̤mel *
kaiyaṉa āzhiyum caṅkum enti *
nampar nam illam pukuntu niṉṟār *
nākarikar pĕritum il̤aiyar **
cĕm paval̤am ivar vāyiṉ vaṇṇam *
tevar ivaratu uruvam cŏlalil *
am paval̤at tiral̤eyum ŏppar- *
acco ŏruvar azhakiyavā-4

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1761. She says about the lord of Thirunāgai, “O friend, he, the young one with a fragrant thulasi garland swarming with bees on his chest and a coral mouth does not know good manners. He comes into our home carrying in his hands a discus and a conch and stays with us. If I try to describe his divine form, I can only say it is like a bundle of beautiful corals. Acho, how can I describe his beauty!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோள் மேல் தோள் மேல்; வம்பு அவிழும் மணம் கமழும்; துழாய் மாலை திருத்துழாய் மாலையுள்ளது; கையன ஆழியும் கையில் சக்கரமும்; சங்கும் ஏந்தி சங்கும் தரித்த இவர்; நம்பர் நம்மிடம் காதல் கொண்டு; நம் இல்லம் தாமே நம் இல்லம்; புகுந்து நின்றார் தேடி வந்தார்; நாகரிகர் பெருமதிப்புடைய; பெரிதும் இவர் மிக்க; இளையர் இளம் பருவமுடையவராக இருக்கிறார்; இவர் வாயின் இவருடைய அதரம்; செம்பவளம் சிவந்த பவளம்; வண்ணம் போன்ற நிறம்; தேவர் இவரது அனைவருக்கும் பெருமானான இவர்; உருவம் சொல்லில் உருவத்தை விவரிக்க நேர்ந்தால்; அம்பவள திரளேயும் அழகிய பவளத்திரள்; ஒப்பர் போன்றது; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோ என்னவென்று கூறுவேன்!