PT 9.2.10

தேவர்களாகி மகிழ்வர்

1767 அன்னமும்கேழலும்மீனுமாய
ஆதியைநாகையழகியாரை *
கன்னிநன்மாமதிள்மங்கைவேந்தன்
காமருசீர்க்கலிகன்றி * குன்றா
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏழுமிரண்டுமொரொன்றும்வல்லார் *
மன்னவராய்உலகாண்டு மீண்டும்
வானவராய்மகிழ்வெய்துவரே. (2)
1767 ## aṉṉamum kezhalum mīṉum āya *
ātiyai nākai azhakiyārai *
kaṉṉi nal mā matil̤ maṅkai ventaṉ *
kāmaru cīrk kalikaṉṟi ** kuṉṟā
iṉ icaiyāl cŏṉṉa cĕñcŏl mālai *
ezhum iraṇṭum or ŏṉṟum vallār *
maṉṉavar āy ulaku āṇṭu * mīṇṭum
vāṉavar āy makizhvu ĕytuvare-10

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1767. The poet Kaliyan, handsome chief of Thirumangai surrounded with strong new walls, composed a garland of ten musical pāsurams with divine words on the god of Thirunāgai who took the forms of a swan, a boar and a fish. If devotees learn and recite these poems they will rule the world as kings and go to the world of the gods and stay there happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னமும் ஹம்ஸமாகவும்; கேழலும் வராஹமாகவும்; மீனும் ஆய மீனாகவும் அவதரித்த; ஆதியை ஆதிமூர்த்தியான; அழகியாரை அழகியவரைக் குறித்து; நாகை திருநாகையில்; கன்னி நல் மா அழிவற்ற நல்ல பெரிய; மதிள் மதில்களையுடைய; மங்கை வேந்தன் திருமங்கை மன்னன்; காமரு சீர் நற்குணங்களையுடையவரான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; குன்றா குறைவில்லாத; இன் இசையால் இனிய இசையுடனே; சொன்ன அருளிச்செய்த; செஞ்சொல் மாலை அழகிய சொல்மாலையான; ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் பத்து பாடலையும்; வல்லார் கற்க வல்லார்; மன்னவராய் உலகு இவ்வுலகில் மன்னவர்களாக; ஆண்டு மீண்டும் ஆட்சி புரிந்து மீண்டும்; வானவராய் நித்யசூரிகளாக; மகிழ்வு எய்துவரே ஆனந்தமடைவர்கள்