PT 9.1.8

கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் இடம் இது

1755 அரவுநீள்கொடியோன்அவையுள்ஆசனத்தை
அஞ்சிடாதேயிட * அதற்குப்
பெரியமாமேனிஅண்டமூடுருவப்
பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன் *
வரையின்மாமணியும்மரதகத்திரளும்
வயிரமும்வெதிருதிர்முத்தும் *
திரைகொணர்ந்துந்திவயல்தொறும்குவிக்கும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1755 arava nīl̤ kŏṭiyoṉ avaiyul̤ ācaṉattai *
añciṭāte iṭa * ataṟkup
pĕriya mā meṉi aṇṭam ūṭuruvap *
pĕrun ticai aṭaṅkiṭa nimirntoṉ- **
varaiyiṉ mā maṇiyum maratakat tiral̤um *
vayiramum vĕtir utir muttum *
tirai kŏṇarntu unti vayaltŏṟum kuvikkum *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-8

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1755. Our lord who grew high in the sky and measured the world went to the Kauravās’ assembly as a messenger, and made himself a seat and sat on it when Duriyodhana with a snake flag would not give him a place in his assembly. He stays in Thirukkannangudi where the waves of the river bring precious jewels, pearls from bamboo canes that split open, emeralds and diamonds and pile them all in the fields.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரவ நீள் கொடியோன் பாம்புக் கொடியுடைய; அவையுள் துர்யோதனன் சபையில்; ஆசனத்தை பொய்யானஆஸனத்தை; அஞ்சிடாதே அஞ்சாது; இட இட்டபோது; அதற்கு அதற்காகவே; பெரிய மா பெரிய; மேனி திருமேனியோடு; அண்டம் மேலுலகம் வரை; ஊடுருவ ஊடுருவிச் செல்லும்படி; பெருந் திசை பெரிய திக்குகள்; அடங்கிட தன்னிலே அடங்கும்படி வளர்ந்த; நிமிர்ந்தோன் பெருமான்; வரையின் மலையிலிருந்து; மா மணியும் சிறந்த ரத்னங்களையும்; மரகதத் திரளும் மரகத குலியல்களையும்; வயிரமும் வயிரங்களையும்; வெதிர் உதிர் மூங்கில்களினின்று உதிர்ந்த; முத்தும் முத்துகளையும்; திரை அலைகள்; உந்தி கொணர்ந்து தள்ளிக்கொண்டு வந்து; வயல்தொறும் வயல்களெங்கும்; குவிக்கும் குவிக்குமிடமான; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே