PT 9.1.7

இராமாவதாரம் எடுத்தவன் இடம் இது

1754 வானுளாரவரைவலிமையால்நலியும்
மறிகடலிலங்கையார்கோனை *
பானுநேர்சரத்தால்பனங்கனிபோலப்
பருமுடியுதிரவில்வளைத்தோன் *
கானுலாமயிலின்கணங்கள்நின்றாடக்
கணமுகில்முரசம்நின்றதிர *
தேனுலாவரிவண்டுஇன்னிசைமுரலும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1754 vāṉ ul̤ār-avarai valimaiyāl naliyum *
maṟi kaṭal ilaṅkaiyār-koṉai *
pāṉu ner carattāl paṉaṅkaṉipolap *
paru muṭi utira vil val̤aittoṉ- **
kāṉ ulām mayiliṉ kaṇaṅkal̤ niṉṟu āṭak *
kaṇa mukil muracam niṉṟu atira *
teṉ ulā vari vaṇṭu iṉ icai muralum *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-7

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1754. When Rāvana, the king of Lankā surrounded with oceans with rolling waves, afflicted the gods in the sky with his valor and conquered them, Rāma went there to bring his wife Sita back, bent his bow, fought with Rāvana and made the ten crowned heads of the king of Lankā fall on the earth like the fruits of palm trees. He stays in Thirukkannangudi where flocks of forest peacocks dance and the clouds roar like drums and the lined bees drink honey and sing sweet music.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் உளார் அவரை தேவர்களை; வலிமையால் தன் வலிமையால்; நலியும் துன்புறுத்திக்கொண்டிருந்த; மறி கடல் அலைகடல் சூழ்ந்த; இலங்கையார் இலங்கை; கோனை அரசனின் ராவணனின்; பரு முடி பருத்த தலைகள்; பானு ஸூர்யனின் கிரணம் போன்ற; சேர் சரத்தால் அம்புகளால்; பனங்கனி பனங்கனி; போல உதிர போல உதிர; வில் வில்; வளைத்தோன் வளைத்த பெருமான்; கான் உலா தான் காட்டிலே உலாவும்; மயிலின் மயில்; கணங்கள் கூட்டங்கள்; நின்று ஆட நின்று ஆட; கண முகில் திரண்ட மேகங்கள்; முரசம் முரசு போல்; நின்று அதிர நின்று அதிர; தேன் உலாம் தேன் பருகித் திரியும்; வரி வண்டு அழகிய வரி வண்டுகள்; இன் இசை இன் இசை; முரலும் முரலும் ரீங்கரிக்கும்; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே