PT 9.1.5

வாமனாவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது

1752 மன்னவன்பெரியவேள்வியில்குறளாய்
மூவடிநீரொடும்கொண்டு *
பின்னும்ஏழுலகும்ஈரடியாகப்
பெருந்திசையடங்கிடநிமிர்ந்தோன் *
அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து
அலைபுனலிலைக்குடைநீழல் *
செந்நெலொண்கவரியசையவீற்றிருக்கும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1752 maṉṉavaṉ pĕriya vel̤viyil kuṟal̤ āy *
mūvaṭi nīrŏṭum kŏṇṭu *
piṉṉum ezh ulakum īr aṭi āka *
pĕrun ticai aṭaṅkiṭa nimirntoṉ- **
aṉṉam mĕṉ kamalattu aṇi malarp pīṭattu *
alai puṉal ilaik kuṭai nīzhal *
cĕnnĕl ŏṇ kavari acaiya vīṟṟirukkum *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-5

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1752. The lord who went to the king Mahabali’s sacrifice as a dwarf, asked for three feet of land and as the king gave the land by pouring water on his hands, took a huge form that covered all the directions and measured the earth and the sky with his two feet- stays in Thirukkannangudi where swans sit on the lovely lotuses under the shadow of leaves in the rippling water fanned by the good paddy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னவன் மஹாபலியின்; பெரிய பெரிய; வேள்வியில் வேள்வியில்; குறள் ஆய் வாமநனாய் அவன் வார்த்த; நீ ரொடும் மூவடி நீரோடு மூவடி; கொண்டு நிலம் பெற்று கொண்டு; பின்னும் பின்பு; ஏழ் உலகும் ஏழ் உலகையும்; ஈரடியாக ஈரடியாக அளந்து; பெருந் திசை பரந்த திசைகளை; அடங்கிட தன்னுள் அடக்கிட; நிமிர்ந்தோன் ஓங்கி வளர்ந்த பெருமான்; அன்ன மென் அன்னம் மென்மையான; கமலத்து தாமரையாகிய; அணி மலர்ப் அழகிய மலர்; பீடத்து பீடத்தில் அமரும்; அலை புனல் அலையுள்ள நீரில்; இலைக் குடை இலைக் குடையின்; நீழல் நிழல் தரும்; செந்நெல் ஒண் அழகிய செந்நெல்; கவரி அசைய சாமரம் வீச; வீற்றிருக்கும் வீற்றிருக்கும்; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே