PT 9.1.4

வராகவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது

1751 வென்றிசேர்திண்மைவிலங்கல்மாமேனி
வெள்ளெயிற்றொள்ளெரித்தறுகண் *
பன்றியாய்அன்றுபார்மகள்பயலை
தீர்த்தவன் பஞ்சவர்பாகன் *
ஒன்றலாஉருவத்துஉலப்பில்பல்காலத்து
உயர்கொடிஒளிவளர்மதியம் *
சென்றுசேர்சென்னிச்சிகரநன்மாடத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1751 vĕṉṟi cer tiṇmai vilaṅkal mā meṉi *
vĕl̤ ĕyiṟṟu ŏl̤ ĕrit taṟu kaṇ *
paṉṟi āy aṉṟu pār-makal̤ payalai *
tīrttavaṉ pañcavar pākaṉ **
ŏṉṟu alā uruvattu ulappu il pal kālattu *
uyar kŏṭi ŏl̤i val̤ar matiyam *
cĕṉṟu cer cĕṉṉic cikara nal māṭat *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-4

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1751. The lord who took the form of a boar with strong eyes, sharp white teeth and a body as large as a mountain, brought the earth goddess from the underworld and saved her from an Asuran and drove the chariot for the Pāndavās in the battles stays in Thirukkannangudi surrounded by incomparable, ancient palaces where flags fly as the moon shines on them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வென்றி சேர் வெற்றி உடையதாய்; திண்மை வலிமையுடையதாய்; விலங்கல் மா மலைபோன்ற பெரிய; மேனி வெள் உருவமும் வெளுத்த; எயிற்று தந்தங்களையும்; ஒள் எரி ஒளியுள்ள நெருப்புப் போன்ற; தறு குரூரமான; கண் கண்களையுடையதுமான; பன்றியாய் வராஹமாய் வந்து; அன்று அன்று; பார் மகள் பூமாதேவியின்; பயலை விரஹ வேதனையை; தீர்த்தவன் தீர்த்தவனும்; பஞ்சவர் பாண்டவர்களுக்கு; பாகன் ஸாரதியுமான; ஒன்றுஅலா எம்பெருமான் பலவகைப்பட்ட; உருவத்து உருவமுடையவனாய்; உலப்பு இல் முடிவில்லாமல்; பல் காலத்து பல காலமுள்ள; உயர் உயர்ந்த; கொடி கொடிகளானவை; ஒளி வளர் ஒளிமிக்க; மதியம் சந்திர மண்டலமளவும்; சென்று சேர் ஓங்கின; சென்னி சிகரங்களை உடையவையான; சிகர நல் நல்ல அழகிய; மாட மாட மாளிகைகளையுடைய; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே