PT 7.7.8

அழுந்தூர் அம்மானே; என்னை ஆட்கொள்

1615 நெடியானே! கடிஆர்கலிநம்பீ!
நின்னையேநினைந்துஇங்குஇருப்பேனை *
கடியார்காளையரைவர்புகுந்து
காவல்செய்த அக்காவலைப்பிழைத்து *
குடிபோந்துஉன்அடிக்கீழ்வந்துபுகுந்தேன்
கூறைசோறுஇவைதந்தெனக்கருளி *
அடியேனைப்பணியாண்டுகொள்எந்தாய்!
அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!
1615 nĕṭiyāṉe kaṭi ārkali nampī *
niṉṉaiye niṉaintu iṅku iruppeṉai *
kaṭi ār kāl̤aiyar aivar pukuntu *
kāval cĕyta ak kāvalaip pizhaittu **
kuṭipontu uṉ aṭikkīzh vantu pukunteṉ *
kūṟai coṟu ivai tantu ĕṉakku arul̤i *
aṭiyeṉaip paṇi āṇṭukŏl̤-ĕntāy *
azhuntūr mel ticai niṉṟa ammāṉe-8

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1615. You, the tall Nambi, take away the troubles of life and I stay here thinking only of you The evil pleasures of the five bull-like senses entered me but I escaped them and I have come here to your feet to worship you. Give me food and clothes and your grace and make me your devotee so that I may serve you, my father and god of Thiruvazhundur facing west.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடியானே! நெடிய பெருமானே!; கடி ஆர்கலி பூமிக்கு அரணாகிய; நம்பீ! கடலில் சயனித்திருப்பவனே!; எந்தாய்! எம்பெருமானே!; அழுந்தூர் மேல் திசை அழுந்தூர் மேல் திசை; நின்ற அம்மானே! நின்ற அம்மானே!; நினைந்து தியானித்துக் கொண்டு; இங்கு இருப்பேனை இங்கு இருக்கிற என்னை; கடி ஆர் பலமுள்ளவைகளாயும்; காளையர் இளம் பருவமுள்ளவைகளாயும் இருக்கும்; ஐவர் பஞ்சேந்திரியங்களும்; புகுந்து என்னுள் புகுந்து; காவல் என்னை உன்னிடம் வரவொட்டாதபடி; செய்த தடை செய்த; அக் காவலை அந்தச் சிறைக்கு; பிழைத்து தப்பி வந்து; உன் அடிக்கீழ் உன் திருவடிக்கீழ்; குடிபோந்து பணியாற்ற; வந்து புகுந்தேன் வந்து புகுந்தேன்; கூறை ஆடையும்; சோறு இவை சோறுமாகிய இத் திருவடிகளை; தந்து எனக்கு அருளி எனக்கு தந்தருளி; அடியேனை என்னை நித்ய; பணி கைங்கர்யனாக்கி; ஆண்டு கொள் கொள்ள வேண்டும்