PT 6.6.8

பக்தர்கட்கு ஏற்ற இடம் திருநறையூர்தான்

1505 முருக்கிலங்குகனித்துவர்வாய்ப்பின்னைகேள்வன்
மன்னெல்லாம்முன்னவியச்சென்று * வென்றிச்
செருக்களத்துத்திறலழியச்செற்றவேந்தன்
சிரந்துணிந்தான்திருவடிநும்சென்னிவைப்பீர்! *
இருக்கிலங்குதிருமொழிவாயெண்தோளீசற்கு
எழில்மாடம்எழுபதுசெய்துஉலகமாண்ட *
திருக்குலத்துவளச்சோழன்சேர்ந்தகோயில்
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
1505 murukku ilaṅku kaṉit tuvar vāyp piṉṉai kel̤vaṉ *
maṉ ĕllām muṉ aviyac cĕṉṟu * vĕṉṟic
cĕrukkal̤attut tiṟal azhiyac cĕṟṟa ventaṉ *
ciram tuṇittāṉ tiruvaṭi num cĕṉṉi vaippīr **
irukku ilaṅku tirumŏzhi vāy ĕṇ tol̤ īcaṟku *
ĕzhil māṭam ĕzhupatu cĕytu ulakam āṇṭa *
tiruk kulattu val̤ac cozhaṉ cernta koyil *
tirunaṟaiyūr maṇimāṭam cermiṉkal̤e-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1505. Worship the feet of the lord, the beloved of Nappinnai whose sweet mouth is as lovely as a murukkam flower. In the Bhārathā war he defeated many kings who had destroyed their enemies on the battlefield. The king of the Chola lineage, the ruler of the world and built seventy temples with beautiful towers for the eight-armed Shivā and praised the lord with the Purushasuktham went to Manimādakkovil in Thirunaraiyur filled with jewel-studded palaces and worshiped him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முருக்கு முருக்கம்பூப்போலவும்; இலங்கு கனி கோவைப் பழம் போலவும்; துவர் வாய் சிவந்திருக்கும் வாயையுடைய; பின்னை கேள்வன் நப்பின்னையின் நாதனும்; முன் முன்பு; மன் க்ஷத்ரிய அரசர்கள்; எல்லாரும் அவிய எல்லாரும் அழிய; சென்று வென்றி வெற்றி தரவல்ல; செருக்களத்து போரில் போய்; செற்ற வேந்தன் மாற்று அரசனான கார்த்த வீரியார்ஜுனனுடைய; திறல் அழிய மிடுக்கு அழியும்படியாக; சிரம் தலையை; துணித்தான் துணித்தவனின்; திருவடி திருவடியை; நும் சென்னி வணங்க; வைப்பீர்! விரும்புவர்களே!; இருக்கு வேதத்தில்; இலங்கு சிறந்தவையான; திருமொழி திருமொழிகளை புருஷசூக்தத்தை; வாய் அநுஸந்திப்பவனாய்; எண் தோள் எட்டுத் தோள்களையுடைய; ஈசற்கு சிவனுக்கு; எழில் எழுபது அழகிய எழுபது; மாடம் ஆலயங்களை; செய்து நிர்மாணித்து; உலகம் ஆண்ட உலகம் ஆண்ட; திருக்குலத்து உயர்ந்த குலத்திற் பிறந்த; வள செல்வச்செழிப்புள்ள; சோழன் சேர்ந்த சோழன் வணங்கிய; கோயில் கோயில்; மணி மணிகளால் இழைக்கப்பட்ட; மாடம் மாடங்களையுடைய; திருநறையூர் திருநறையூர்; சேர்மின்களே சென்று அடையுங்கள்