PT 6.6.2

ஊழி முதல்வன் உறைவிடம் நறையூர்

1499 கொழுங்கயலாய்நெடுவெள்ளங்கொண்டகாலம்
குலவரையின்மீதோடி அண்டத்தப்பால் *
எழுந்துஇனிதுவிளையாடும்ஈசன்எந்தை
இணையடிக்கீழ்இனிதிருப்பீர்! இனவண்டாலும் *
உழும்செறுவில்மணிகொணர்ந்துகரைமேல்சிந்தி
உலகெல்லாம்சந்தனமும்அகிலும்கொள்ள *
செழும்பொன்னிவளங்கொடுக்கும்சோழன்சேர்ந்த
திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
1499 kŏzhuṅ kayal āy nĕṭu vĕl̤l̤am kŏṇṭa kālam *
kula varaiyiṉ mītu oṭi aṇṭattu appāl *
ĕzhuntu iṉitu vil̤aiyāṭum īcaṉ ĕntai *
iṇai-aṭikkīzh iṉitu iruppīr iṉa vaṇṭu ālum **
uzhum cĕṟuvil maṇi kŏṇarntu karaimel cinti *
ulaku ĕllām cantaṉamum akilum kŏl̤l̤a *
cĕzhum pŏṉṉi val̤am kŏṭukkum cozhaṉ cernta *
tirunaṟaiyūr maṇimāṭam cermiṉkal̤e-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1499. O devotees, you stay sweetly under the feet of the lord, our father who took the form of a fish and swam, jumping as high as a mountain, playing joyfully and saving the world when a terrible flood came at the end of the eon. He stays in Thirunaraiyur filled with jewel-studded palaces where the flourishing Ponni river brings jewels, sandal wood and akil and leaves them on the banks of the fields for people of the whole world to have. The Chola king went to the Manimādam temple there and worshiped the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடு வெள்ளம் பிரளய கால பெருவெள்ளம்; கொண்ட காலம் ஏற்பட்ட சமயத்தில்; கொழுங் கயல் ஆய் பெரிய மீனாய்; குலவரையின் மீது ஓடி மலைகள் மீது ஓடி; அண்டத்து அப்பால் அண்டத்துக்கு அப்பால்; எழுந்து எழுந்து போய்; இனிது விளையாடும் இனிது விளையாடின; ஈசன் எந்தை எம்பெருமானின்; இணை அடி கீழ் இரண்டு பாதங்களை; இனிது இருப்பீர் பற்ற விருபுபவர்களே!; இன வண்டு கூட்டமாகத் திரண்ட வண்டுகள்; ஆலும் நடமாடும்; செழும் பொன்னி அழகிய காவேரியானது; உழும் உழும் வயல்களின்; செறுவில் வரப்புகள் மீது; மணி ரத்னங்களை; கொணர்ந்து கொண்டுவந்து; கரைமேல் சிந்தி கரைமேல் சிதறத் தள்ளியும்; உலகு எல்லாம் எல்லா ஜனங்களும்; சந்தனமும் அகிலும் சந்தன அகிற்கட்டைகளையும்; கொள்ள எடுத்துக்கொள்ளும்படியாக; வளம் வளங்களை; கொடுக்கும் கொடுக்குமிடமாய்; சோழன் சேர்ந்த சோழராஜன் பணிசெய்த; மணி மணிகளால் இழைக்கப்பட்ட; மாடம் மாடங்களையுடைய; திருநறையூர் திருநறையூர்; சேர்மின்களே சென்று அடையுங்கள்