PT 5.10.5

பஞ்சாயுதன் உறையும் இடம் இது

1442 மூளஎரிசிந்திமுனிவெய்திஅமர்செய்துமென வந்தஅசுரர் *
தோளும்அவர்தாளுமுடியோடுபொடியாக நொடியாமளவெய்தான் *
வாளும்வரிவில்லும்வளையாழிகதைசங்கமிவை அங்கையுடையான் *
நாளும்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.5
1442 mūl̤a ĕri cinti muṉivu ĕyti amar cĕytum ĕṉa *
vanta acurar *
tol̤um avar tāl̤um muṭiyoṭu pŏṭi āka * nŏṭi
ām al̤avu ĕytāṉ **
vāl̤um vari villum val̤ai āzhi katai caṅkam * ivai
amkai uṭaiyāṉ *
nāl̤um uṟaikiṉṟa nakar * nantipuraviṇṇakaram-
naṇṇu maṉame-5

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1442. When the Asurans thought, “We will fight with our enemies and burn all their places, ” our god who carries a sword, a bow, a discus, a club, and a conch in his beautiful hands shot his arrows swiftly and cut off their arms and legs. O heart, think of Nandipuravinnagaram where he stays always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மூள எரி புகை எழ நெருப்பை; சிந்தி சிதறவிட்டு; முனிவு எய்தி கோபித்து; அமர் செய்தும் போரிடுவோம்; என வந்தஅசுரர் என வந்த அசுரர்களின்; தோளும் அவர் தோள்களும்; தாளும் முடியோடு கால்களும் தலைகளும்; பொடி ஆக பொடிப் பொடி ஆக; நொடி ஆம்அளவு நொடிப் பொழுதில்; வாளும் வாளை; எய்தான் செலுத்தினவனும்; வரி வில்லும் அழகிய வில்லும்; வளை ஆழி வளைந்த சக்கரமும்; கதை சங்கம் கதை சங்கம்; இவை இவைகளை; அம் கை உடையான் அழகிய கையிலுடையவனான; நாளும் உறைகின்ற பெருமான்; நகர் இருக்குமிடம்; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக

Āchārya Vyākyānam

பஞ்சாயுதம் தரித்த க்ஷேத்ரம் ஜெகந்நாத பெருமாள் மேற்கு நோக்கி கிழக்கு நோக்கி தாயார் தவம் போக ஸ்ரீ நிவாஸன் நாதன் கோயில் கோலாப்பூர் தவம் போல் இங்கு தவம் ஐப்பசி சுக்ல பாஷா வெள்ளிக்கிழமை திருமணம் செண்பக வல்லி தாயார் செண்பகாரண்யம் -மன்னார்குடி போல் இங்கும் அதிகார நந்தி -திரு பாற் கடலில் நுழைய த்வபாரக பாலர் சாபம் வயிர் எரிய அவர் சாபம் போக்கி பிரயோக சக்கரம் -வீற்று இருந்த திருக்கோலம்

+ Read more