PT 4.3.9

அடியவரின் உள்ளத்தில் ஊறும் தேன்

1276 களங்கனிவண்ணா! கண்ணணே! என்தன்
கார்முகிலே! எனநினைந்திட்டு *
உளங்கனிந்திருக்கும்அடியவர்தங்கள்
உள்ளத்துள்ஊறியதேனை *
தெளிந்தநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
வளங்கொள்பேரின்பம்மன்னிநின்றானை
வணங்கிநான்வாழ்ந்தொழிந்தேனே.
1276 kal̤aṅkaṉi vaṇṇā kaṇṇaṉe ĕṉ-taṉ *
kār mukile ĕṉa niṉaintiṭṭu *
ul̤am kaṉintirukkum aṭiyavar-taṅkal̤ *
ul̤l̤attul̤ ūṟiya teṉai **
tĕl̤inta nāṉmaṟaiyor nāṅkai nal naṭuvul̤ *
cĕm pŏṉ cĕy koyiliṉul̤l̤e *
val̤am kŏl̤ per iṉpam maṉṉi niṉṟāṉai *
vaṇaṅki nāṉ vāzhntŏzhinteṉe-9

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1276. Our god who springs like honey in the hearts of his devotees when they think of him and love him, saying, “You are dark as a kalam fruit. You are Kannan. You have the color of a dark cloud!” stays giving pleasure to all in Chemponseykoyil in Nāngai where Vediyars live and recite the four Vedās. I worship him and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
களங்கனி களாப்பழம்போன்ற; வண்ணா! நிறமுடையவனே!; கண்ணனே! என்தன் கண்ணனே! என்னுடைய; கார் முகிலே! காளமேகமே!; என நினைந்திட்டு என்று தியானித்து; உளம் கனிந்திருக்கும் மனம் கனிந்திருக்கும்; அடியவர் தங்கள் அடியவர்கள் தங்கள்; உள்ளத்துள் உள்ளத்துள்; ஊறிய தேனை ஊறிய தேன் போன்றவனும்; தெளிந்த தெளிந்த; நான்மறையோர் வேதமோதும் வைதிகர்கள் வாழும்; நாங்கை நல் நடுவுள் திருநாங்கூரின் நடுவிலே; செம்பொன்செய் செம்பொன் செய் என்னும்; கோயிலின்உள்ளே கோயிலின் உள்ளே; வளம் கொள் பேரின்பம் மிகுந்த பேரின்பத்தை; மன்னி அடைந்து; நின்றானை நிற்பவனான எம்பெருமானை; வணங்கி நான் வணங்கி அடியேன் நான்; வாழ்ந்தொழிந்தேனே வாழ்ந்து உய்ந்தேன்
kal̤angani like kal̤āppazham (a berry fruit); vaṇṇā ŏh one who has the complexion!; kaṇṇanĕ ŏh krishṇa!; enṛan shining to me; kārmugilĕ ŏh one who is having rejuvenating form similar to monsoon cloud!; ena in this manner; ninaindhittu meditated; ul̤am heart; kanindhu irukkum well matured; adiyavar thangal̤ servitors-; ul̤l̤aththul̤ in the heart; ūṛiya remaining permanently; thĕnai being sweet like honey; val̤am kol̤ beautiful; pĕr inbam immeasurable bliss; manni acquired; ninṛānai one who is mercifully present; thel̤indha those who are certain about the truth; nānmaṛaiyŏr experts of four vĕdhams; nāngai in thirunāngūr; nal naduvul̤ present in the good central location; sem pon sey kŏyilin ul̤l̤ĕ in the dhivyadhĕṣam named sembonsey kŏyil; nān ī; vaṇangi worshipped; vāzhndhozhindhĕn became enlivened