PT 4.1.8

மைதிலியை மணம் புரிந்தவன் மகிழ்விடம் இதுதான்

1255 வாராருமிளங்கொங்கை மைதிலியைமணம்புணர்வான் *
காரார்திண்சிலையிறுத்த தனிக்காளைகருதுமிடம்
ஏராரும்பெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சீராரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.
PT.4.1.8
1255 vār ārum il̤aṅ kŏṅkai * maitiliyai maṇam puṇarvāṉ *
kār ār tiṇ cilai iṟutta * taṉik kāl̤ai karutum iṭam **
er ārum pĕruñ cĕlvattu * ĕzhil maṟaiyor nāṅkai-taṉṉul̤ *
cīr ārum malarp pŏzhil cūzh * tiruttevaṉārtŏkaiye-8

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1255. Our lord, mighty as a bull, who broke the strong bow to marry Mythili whose young breasts were held with a band stays in Thiruthevanārthohai in Nāngai surrounded with beautiful blooming groves where divine Vediyars, learned in the Vedās, live.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் ஆரும் கச்சணிந்த; இளம் கொங்கை மைதிலியை ஸீதையை; மணம் புணர்வான் திருமணம் செய்து கொள்ள; கார் ஆர் திண் கறுத்த திடமான; சிலை இறுத்த வில்லை முறித்தவனான; தனிக்காளை யௌவநபுருஷன்; கருதும் இடம் இருக்குமிடம்; ஏடு ஏறு ஏடுகளிலே பதிவு செய்யத் தக்க; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வச் செழிப்போடு; எழில் மறையோர் வைதிகர்கள் வாழும்; நாங்கை தன்னுள் திருநாங்கூரில்; சீர் ஆரும் மலர் அழகிய பூக்களையுடைய; பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
var by cloth; ārum held; il̤am kongai having youthful bosoms; maidhiliyai pirātti, the daughter of the ruler of mithilā; maṇam puṇarvān to marry; kār ār very black; thiṇ strong; silai bow; iṛuththa being the one who broke; thani distinguished; kāl̤ai youthful chakravarthith thirumagan; karudhum idam the abode where he is desirously residing; ĕr ārum very beautiful; perum unbounded; selvaththu wealthy; ezhil maṛaiyŏr filled with ṣrīvaishṇavas who analyse the beautiful vĕdhams; nāngai thannul̤ in thirunāngūr; sīr ārum very beautiful; malar having flowers; pozhil by gardens; sūzh surrounded; thiruththĕvanār thogai thiruththĕvanār thogai.