PT 3.9.8

நரகாசுரனை அழித்தவன் மகிழ்ந்துறையும் இடம் இது

1235 ஆறாதசினத்தின்மிகுநரகனுரம்அழித்த
அடலாழித்தடக்கையன், அலர்மகட்கும்அரற்கும் *
கூறாகக்கொடுத்தருளும்திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
மாறாதமலர்க்கமலம் செங்கழுநீர்ததும்பி
மதுவெள்ளம்ஒழுக வயலுழவர்மடையடைப்ப *
மாறாதபெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
PT.3.9.8
1235 āṟāta ciṉattiṉ miku narakaṉ uram azhitta *
aṭal āzhit taṭak kaiyaṉ alar-makaṭkum araṟkum *
kūṟākak kŏṭuttarul̤um tiru uṭampaṉ imaiyor *
kula mutalvaṉ makizhntu iṉitu maruvi uṟai koyil **
māṟāta malark kamalam cĕṅkazhunīr tatumpi *
matu vĕl̤l̤am ŏzhuka vayal uzhavar maṭai aṭaippa *
māṟāta pĕruñ cĕlvam val̤arum aṇi nāṅkūr *
vaikuntaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-8

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1235. The lord, the origin of the gods who keeps Shivā and Nānmuhan on his divine body killed the angry Narahāsuran with the discus he holds in his hands. He stays happily in the temple in Vaikundavinnagaram in beautiful and flourishing Nāngur where lotuses bloom and never wither and beautiful kazuneer flowers are spread everywhere, dripping with honey, and where water flows through the channels that the farmers block with small dams and the fields will flourish. O innocent heart, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆறாத சினத்தின் மிகு தணியாத கோபத்தையுடைய; நரகன் உரம் அழித்த நரகாசுரனின் மிடுக்கை அழித்த; அடல் ஆழித் வலிமை மிக்க சக்கராயுதத்தை; தடக்கையன் கையிலுடையவனே; அலர் மகட்கும் அரற்கும் திருமகளுக்கும் சிவனுக்கும்; திரு உடம்பன் தன் உடம்பின் ஒரு பாகத்தை; கூறாக அனுபவிக்க இடம்; கொடுத்தருளும் கொடுத்தவனும்; இமையோர் குல தேவர்கள் குல; முதல்வன் முதல்வனுமான பெருமான்; மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்; மாறாத மலர்க் கமலம் இடைவிடாத தாமரை; செங்கழுநீர் செங்கழுநீர் பூக்கள் ஆகிய இவற்றின்; மது வெள்ளம் தேன் வெள்ளம்; ததும்பி ஒழுக இடைவிடாது பாய்வதனால்; உழவர் பயிர்த் தொழில் செய்பவர்கள்; வயல் மடை தங்கள் கழனி மடைகளை; அடை அடைக்கவும்; மாறாத பெருஞ் செல்வம் மாறாத பெரும் செல்வம்; வளரும் அணி வளர்ந்துவரும் அழகிய; நாங்கூர் திருநாங்கூரிலிருக்கும்; வைகுந்தவிண்ணகரம் வைகுந்தவிண்ணகரம்; வணங்கு மட நெஞ்சே! வணங்கு மட நெஞ்சே!
āṛādha ṭhat which cannot be subdued; sinaththin anger; migu charging; naragan narakāsuran-s; uram strength; azhiththa eliminated; adal āzhi battle-ready thiruvāzhi (divine chakra); thadakkaiyan being the one who is having in his huge hand; alar magatkum for periya pirāttiyār; ararkkum for rudhran; kūṛu āga to be enjoyed as their share; koduththu arul̤um thiru udamban one who is having the ṣeelam (simplicity) to give the limbs of his divine form; imaiyŏr kula mudhalvan sarvĕṣvaran, who is the controller of nithyasūris; magizhndhu with joy; inidhu to be sweet for the devotees; maruvi uṛai kŏyil eternally residing without any other expectation; māṛādha malark kamalam the lotus which is continuously blossoming; sengazhunīr sengazhunīr (flowers such as this, from them); thadhumbi densely flowing; madhu vel̤l̤am ozhuga since the flood of honey is flowing everywhere; uzhavar farmers; vayal madai adaippa as they close the canals in their fields; māṛādha continuously growing; perum selvam val̤arum filled with abundant wealth of water; nāngūr in thirunāngūr; vaigundha viṇṇagaram vaigundha viṇṇagaram; vaṇangu worship; mada nenjĕ ŏh humble heart!