PT 3.8.10

இத்தமிழ்மாலை பாடுவார் சக்கரவர்த்தி ஆவார்

1227 வண்டார்பொழில்சூழ்ந்து அழகாயநாங்கூர்
மணிமாடக்கோயில்நெடுமாலுக்கு * என்றும்
தொண்டாயதொல்சீர் வயல்மங்கையர்க்கோன்
கலியன்ஒலிசெய் தமிழ்மாலை வல்லார் *
கண்டார்வணங்கக் களியானைமீதே
கடல்சூழுலகுக்கு ஒருகாவலராய் *
விண்தோய் நெடுவெண்குடை நீழலின்கீழ்
விரிநீருலகாண்டு விரும்புவரே. (2)
PT.3.8.10
1227 ## vaṇṭu ār pŏzhil cūzhntu azhaku āya nāṅkūr *
maṇimāṭakkoyil nĕṭumālukku * ĕṉṟum
tŏṇṭu āya tŏl cīr vayal maṅkaiyar-koṉ *
kaliyaṉ ŏlicĕy tamizh-mālai vallār **
kaṇṭār vaṇaṅkak kal̤i yāṉai mīte *
kaṭal cūzh ulakukku ŏru kāvalar āy *
viṇ toy nĕṭu vĕṇ kuṭai nīzhaliṉ kīzh *
viri nīr ulaku āṇṭu virumpuvare-10

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1227. Kaliyan, the devotee of him who is the king of Thirumangai surrounded with flourishing fields and groves swarming with bees, composed ten musical Tamil pāsurams on Nedumāl in the Manimādakkoyil in beautiful Nāngur. If devotees learn and recite them well, they will become the kings of the wide world surrounded by oceans and ride on rutting elephants in the shade of white umbrellas that touch the sky, and they will rule the world and enjoy their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு ஆர் வண்டுகள் நிறைந்த; பொழில் சூழ்ந்து சோலைகள் சூழ்ந்த; அழகு ஆய நாங்கூர் அழகிய நாங்கூரில்; மணிமாடக்கோயில் மணிமாடக்கோயிலில்; நெடுமாலுக்கு என்றும் நெடுமாலுக்கு என்றும் நித்ய; தொண்டு ஆய கைங்காரியம் செய்வதையே; தொல் சீர் ஸஹஜகுணமாகவுடையரும்; வயல் வயல் சூழ்ந்த; மங்கையர் கோன் திருமங்கை நாட்டுத் தலைவருமான; கலியன் ஒலிசெய் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை கற்கவல்லார்; கண்டார் வணங்க கண்டவரெல்லாம் வணங்ககும்படி; களி யானை மீதே யானை மேலேறி; கடல் சூழ் கடல் சூழ்ந்த மண்ணுலகம்; உலகுக்கு முழுமைக்கும்; ஒரு காவலராய் தாங்களே அரசராகி; விண் தோய் வானத்தளவு உயர்ந்த; நெடு வெண் குடை வெண்கொற்றக் குடையின்; நீழலின் கீழ் கீழிருந்து; விரி நீர் உலகு கடல் சூழ்ந்த உலகை; ஆண்டு ஆண்டு கொண்டு; விரும்புவரே மகிழ்ந்திருக்கப்பெறுவர்
vaṇdu ār ḥaving abundance of beetles; pozhil sūzhndhu surrounded by gardens; azhagāya beautiful; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil eternally residing in thirumaṇimādak kŏyil; nedu mālukku for sarvĕṣvaran; enṛum thoṇdāya acquired due to engaging in eternal kainkaryam; thol sīr having endless wealth; vayal mangaiyar kŏn the king of thirumangai region which is surrounded by fertile fields; kaliyan āzhvār; oli sey mercifully spoke; thamizh mālai vallār those who can willingly learn these ten pāsurams which are like garlands; kaṇdār vaṇanga to be bowed down at their divine feet by those who saw them; kal̤i yānai mīdhĕ being seated on intoxicated elephant and coming on a procession; kadal sūzh ulagaukku the earth which is surrounded by four oceans; oru kāvalarāy being the independent controller; viṇ thŏy going up to sky; nedu veṇ kudai nīzhalin kīzh remaining under the shade of pearl umbrella; viri nīr ulagāṇdu ruling over the brahmāṇdam (universe of brahmā) which is surrounded by āvaraṇa jalam (layer of water).; viirumbuvar will remain endlessly joyful