PT 3.6.7

மணவாளா! என் கண்ணில் நீ உள்ளாயே!

1204 கொண்டுஅரவத்திரையுலவுகுரைகடல்மேல், குலவரைபோல் *
பண்டு அரவினணைக்கிடந்து பாரளந்தபண்பாளா! *
வண்டுஅமரும்வளர்ப்பொழில்சூழ்வயலாலிமைந்தா! * என்
கண்துயில்நீகொண்டாய்க்கு என்கனவளையும் கடவேனோ!
PT.3.6.7
1204 kŏṇṭu aravat tirai ulavu * kurai kaṭalmel kulavaraipol *
paṇṭu araviṉ aṇaik kiṭantu * pār al̤anta paṇpāl̤ā **
vaṇṭu amarum val̤ar pŏzhil cūzh * vayal āli maintā * ĕṉ
kaṇ tuyil nī kŏṇṭāykku * ĕṉ kaṉa val̤aiyum kaṭaveṉo?-7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1204. You, our good-natured lord who measured the earth and the sky, who are as strong as a mountain and rest on a snake bed on the sounding ocean with rolling waves are the king of Thiruvāli surrounded with flourishing groves where bees swarm. You have stolen my sleep. Are you thinking of stealing my gold bangles too?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டு முன்பொரு சமயம்; அரவ திரை உலவு அலைகளோடு கூடின; குரை கடல் மேல் கிடந்து பாற்கடலிலே; அரவின் ஆதிசேஷனாகிற; அணை இனிய படுக்கையிலே; குலவரை போல் சிறந்த மலைபோலே; கிடந்து கிடந்தவனும்; பார் அளந்த திரிவிக்கிரமனாய் பூமியை; பண்பாளா! அளந்தவனும்; வண்டு அமரும் வண்டுகள் இருக்கும்; வளர் பொழில் சோலைகளால்; சூழ் சூழ்ந்த; வயல் வயல்களையுடைய; ஆலி மைந்தா! திருவாலியில் இருப்பவனே!; என் கண் துயில் எனது உறக்கத்தை; நீ கொண்டாய்க்கு இழந்த உனக்கு; என் கன வளையும் எனது பொன்வளைகளையுமா; கடவேனோ! இழக்கவேண்டும்?
paṇdu Before danger was inflicted by mahābali et al on earth; aravam thirai ulavu having tumultuous noise and tides; kurai kadal mĕl on the vast thiruppāṛkadal (kshīrābdhi); aravin aṇai on thiruvandhāzhwān (ādhiṣĕshan); kula varai pŏl reclining like a huge anchoring mountain reclining; koṇdu having that abode nicely in his divine heart (and subsequently when there was danger inflicted by mahābali); pār al̤andha measured the world; paṇbāl̤ā ŏh one who has simplicity!; vaṇdu amarum val̤ar pozhil surrounded by garden with tall trees where beetles are present; vayal having fertile fields; āli in thiruvāli; maindhā oh youthful one!; en kaṇ thuyil my sleep; nī koṇdāykku for you who fully stole; en kana val̤aiyum golden bangles on my hand; kadavĕnŏ will ī lose?