PT 3.5.4

நின் திருவடிகளை மறக்காமல் இருக்க அருள் செய்தாயே!

1191 மின்னில்மன்னுநுடங்கிடை மடவார்தம்சிந்தைமறந்து வந்து * நின்
மன்னுசேவடிக்கே மறவாமை வைத்தாயால் *
புன்னைமன்னுசெருந்தி வண்பொழில்வாய்அகன்பணைகள் கலந்து * எங்கும்
அன்னம்மன்னும்வயல் அணியாலியம்மானே!
PT.3.5.4
1191 miṉṉiṉ maṉṉum nuṭaṅku iṭai * maṭavār-tam cintai maṟantu vantu * niṉ
maṉṉu cevaṭikke * maṟavāmai vaittāyāl **
puṉṉai maṉṉu cĕrunti * vaṇ pŏzhil vāy-akaṉ paṇaikal̤ kalantu * ĕṅkum
aṉṉam maṉṉum vayal * aṇi āli ammāṉe-4

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1191. You made me forget the beautiful women with waists as thin as lightning and think only of your divine, eternal feet. You are our dear father, the god of beautiful Thiruvāli filled with thriving paddy fields, flourishing groves, punnai trees, blooming cherundi plants and swans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன்னை செருந்தி மன்னு புன்னை மரங்களிருக்கும்; வண் பொழில் வாய் அகன் அழகிய சோலைகளின்; பணைகள் அன்னம் தடாகங்களில் அன்னங்கள்; எங்கும் கலந்து சேர்ந்து வாழும்; மன்னும் வயல் வயல்களையுடைய; அணி ஆலி அழகிய திருவாலியிலிருக்கும்; அம்மானே! பெருமானே!; மின்னில் மன்னும் மின்னல் போன்ற; நுடங்கு இடை நுண்ணிய இடையுடைய; மடவார் தம் பெண்களை பற்றிய; சிந்தை மறந்து சிந்தனையை தவிர்ந்து; வந்து நின் மன்னு வந்து உன் பக்கலிலே வந்து; சேவடிக்கே அழகிய பாதங்களையே நான்; மறவாமை மறவாமல் பற்றும்படி; வைத்தாயால் எனக்கு அருள் செய்திருக்கிறாய்
punnai punnai trees; serundhi surapunnai trees; mannu filled with; vaṇ beautiful; pozhil vāy agan inside the garden; paṇaigal̤ in the ponds; annam swans; engum kalandhu remaining together with each other, everywhere; mannum residing eternally; vayal having fertile fields; aṇi āli ammānĕ ŏh lord of beautiful thiruvāli!; minnil mannu matching lightning; nudangu subtle; idai having waist; madavār tham towards women; sindhai maṛandhu eliminating the attachment; vandhu coming towards you; mannu always remaining in the same manner; nin your; sĕvadikkĕ beautiful, divine feet only; maṛavāmai to not let me forget; vaiththāy you have mercifully done;; āl ḥow amaśing is this!