PT 3.5.10

இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வானுலகு

1197 புல்லிவண்டறையும்பொழில்புடைசூழ்தென்னாலி யிருந்தமாயனை *
கல்லின்மன்னுதிண்தோள் கலியன்ஒலிசெய்த *
நல்லஇன்னிசைமாலை நாலுமோரைந்துமொன்றும் நவின்று * தாம்உடன்
வல்லராயுரைப்பார்க்கு இடமாகும்வானுலகே. (2)
PT.3.5.10
1197 ## pulli vaṇṭu aṟaiyum pŏzhil puṭai cūzh * tĕṉ āli irunta māyaṉai *
kalliṉ maṉṉu tiṇ tol̤ * kaliyaṉ ŏlicĕyta **
nalla iṉ icai mālai * nālum or aintum ŏṉṟum naviṉṟu tām * uṭaṉ
vallar āy uraippārkku * iṭam ākum-vāṉ ulake-10

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1197. Kaliyan with strong mountain-like arms composed ten sweet poems on the god Māyan of Thiruvāli surrounded with groves where bees embrace one another and sing. If devotees learn these pāsurams well and sing them and teach them to others, they will go to the spiritual world in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள் ஒன்றோடொன்று; புல்லி தழுவிக்கொண்டு; அறையும் ரீங்காரம் பண்ணும்; பொழில் புடை சூழ் சோலைகள் சூழ்ந்த; தென் ஆலி இருந்த அழகிய திருவாலியிலிருக்கும்; மாயனை எம்பெருமானைக் குறித்து; கல்லின் மன்னு மலைபோல் திடமான; திண் தோள் தோள்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலி செய்த அருளிச்செய்த; நல்ல நல்ல அழகிய; இன் இசை மாலை இனிய இசையுடன் கூடின; நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் இப்பத்துப் பாசுரங்களையும்; நவின்று தாம் உடன் வல்லராய் கற்று அர்த்தத்துடன்; உரைப்பார்க்கு ஓத வல்லார்க்கு; இடம் ஆகும் வான் உலகே பரமபதம் இருப்பிடமாகும்
vaṇdu beetles; pulli embracing each other; aṛaiyum humming; pozhil garden; pudai sūzh surrounding everywhere; then beautiful; āli in dhivyadhĕṣam named thiruvāli; irundha mercifully residing; māyanai on sarvĕṣvaran who is amaśing; kallin like a mountain; thiṇ strong; mannu eternally present; thŏl̤ having shoulder; kaliyan thirumangai āzhvār; oli seydha mercifully spoke; nalla beautiful; in isai having sweet tune; mālai nālum ŏr aindhum onṛum ten pāsurams; navinṛu recite; thām udan vallarāy uraippārkku for those who constantly meditate their meanings; vān ulagĕ paramapadham only; idam āgum will become the abode.