PT 3.10.9

அரிசரணம் என்று வணங்கும் இடம் இது

1246 வஞ்சனையால்வந்தவள்தன்உயிருண்டு வாய்த்த
தயிருண்டுவெண்ணெயமுதுண்டு * வலிமிக்க
கஞ்சனுயிரதுவுண்டுஇவ்வுலகுண்டகாளை
கருதுமிடம், காவிரிசந்துஅகில்கனகம்உந்தி *
மஞ்சுலவுபொழிலூடும்வயலூடும்வந்து
வளங்கொடுப்பமாமறையோர்மாமலர்கள் தூவி *
அஞ்சலித்துஅங்குஅரிசரணென்று இறைஞ்சுமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.9
1246 vañcaṉaiyāl vantaval̤-taṉ uyir uṇṭu * vāytta
tayir uṇṭu vĕṇṇĕy amutu uṇṭu * vali mikka
kañcaṉ uyir-atu uṇṭu iv ulaku uṇṭa kāl̤ai *
karutum iṭam-kāviri cantu akil kaṉakam unti **
mañcu ulavu pŏzhilūṭum vayalūṭum vantu *
val̤am kŏṭuppa mā maṟaiyor mā malarkal̤ tūvi *
añcalittu aṅku ari caraṇ ĕṉṟu iṟaiñcum aṇi nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-9

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1246. The strong bull-like god who swallowed all the seven worlds, killed heroic Kamsan, killed Putanā when she came to cheat him taking the form of a mother, and stole and ate good churned yogurt and sweet butter stays in the beautiful Arimeyavinnagaram temple in Nāngur where the Kaveri brings sandalwood, akil fragrance and gold as it flows through groves where clouds float and continues through fields nourishing the land and where learned Vediyars, reciters of the Vedās, sprinkle flowers and worship him saying, “O Hari, we bow to your feet, you are our refuge. ” O heart, let us go and worship him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சனையால் கெட்ட எண்ணத்துடன்; வந்தவள் தன் வந்த பூதனையின்; உயிருண்டு உயிரை மாய்த்து; வாய்த்த தயிர் உண்டு அருகிலிருந்த தயிரை உண்டு; வெண்ணெய் அமுது உண்டு வெண்ணெயை உண்டு; வலி மிக்க கஞ்சன் வலிமையுடைய கம்சனின்; உயிர் அது உண்டு உயிரை மாய்த்து; இவ் உலகு உண்ட இந்த உலகத்தை உண்ட; காளை யுவாவானவன்; கருதும் இடம் விரும்பி இருக்குமிடம்; காவிரி காவிரி நதி; சந்து சந்தன மரங்களையும்; அகில் அகில் மரங்களையும்; கனகம் உந்தி பொன்னையும் தள்ளிக்கொண்டு வந்து; மஞ்சு உலவு மேகத்தளவு உயர்ந்த; பொழிலூடும் சோலைகளிலும்; வயலூடும் வந்து வயல்களிலும் புகுந்து; வளம் கொடுப்ப செழிப்பு உண்டாக்க; மா மறையோர் வைதிகர்கள்; மா மலர்கள் தூவி மலர்களைத் தூவி; அஞ்சலித்து அங்கு அங்கு கைகூப்பி வணங்கி; அரி சரண் என்று ஹரி சரணம் என்று; இறைஞ்சும் அணி துதிக்க அழகிய; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
vanjanaiyāl assuming a deceitful form; vanadhaval̤ than pūthanā who came; uyir life; uṇdu ate; vāyththa present near by; thayir uṇdu drank the curd; veṇṇey amudhu uṇdu mercifully ate the butter; vali mikka very strong; kanjan uyiradhu kamsan-s life; uṇdu ate; ivvulagu this world; uṇda mercifully placed in his stomach; kāl̤ai the youthful one; karudhum idam abode where he desirously resides; kāviri river kāvĕri; sandhu sandalwood trees; agil agaru (fragrant) trees; kanagam gold; undhi pushed and came; manju ulavu pozhilūdum in the garden which has grown tall up to clouds; vayalūdum in fertile field; vandhu entered; val̤am koduppa creating wealth; mā maṛaiyŏr brāhmaṇas who are great vaidhikas; mā malargal̤ thūvi submitting the best flowers; angu anjaliththu standing there performing anjali (joining the palms); ari saraṇ enṛu saying -ŏh hari! ẏour divine feet are our refuge-; iṛainjum surrendering with praises; aṇi having beauty; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.