PT 11.8.9

கண்ணனே! அடியேனுக்கு அருள்வாய்

2030 நந்தாநரகத் தழுந்தாவகை * நாளும்
எந்தாய்! தொண்டரானவர்க்கு இன்னருள்செய்வாய்! *
சந்தோகா! தலைவனே! தாமரைக்கண்ணா! *
அந்தோ! அடியேற்கு அருளாய்உன்னருளே. (2)
2030 ## nantā narakattu azhuntāvakai * nāl̤um-
ĕntāy tŏṇṭar āṉavarkku * iṉ arul̤ cĕyvāy **
cantokā talaivaṉe * tāmaraik kaṇṇā!- *
anto aṭiyeṟku * arul̤āy uṉ arul̤e-9

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2030. O my father, show me a path so I will not be plunged into indestructible hell. Give us, your devotees, your sweet grace always. You are the Chandogya Upanishad, our chief with lotus eyes. O dear one, give your grace to me, your slave.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தாய்! எமக்கு ஸ்வாமியே!; தொண்டர் தொண்டர்கள்; ஆனவர்க்கு ஆனவர்க்கு; இன் அருள் இனிய அருள்; செய்வாய்! செய்பவனே!; சந்தோகா! வேதப் பொருளே!; தலைவனே! தலைவனே!; தாமரை தாமரைப் போன்ற; கண்ணா! கண்களையுடையவனே!; நந்தா நரகத்து பிறவி என்னும் நரகத்தில்; அழுந்தாவகை அழுந்தாதபடி; அடியேற்கு அடியேனுக்கு; நாளும் எப்பொழுதும்; உன் அருளே உன் அருளையே; அருளாய் அந்தோ! அருளாய் அந்தோ!