PT 11.8.3

ஒரே வீட்டில் பாம்போடு பழகுவது போல

2024 தூங்கார்பிறவிக்கள் இன்னம்புகப்பெய்து *

வாங்காயென்றுசிந்தித்து நான்அதற்குஅஞ்சி *

பாம்போடுஒருகூரையிலே பயின்றாற்போல் *

தாங்காதுஉள்ளம்தள்ளும் என்தாமரைக்கண்ணா!
2024 tūṅku ār piṟavikkal̤ * iṉṉam pukap pĕytu *
vāṅkāy ĕṉṟu cintittu * nāṉ ataṟku añci- **
pāmpoṭu ŏru kūraiyile * payiṉṟālpol- *
tāṅkātu ul̤l̤am tal̤l̤um * ĕṉ tamaraikkaṇṇā-3

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2024. O my lotus-eyed Kannan, I have suffered, born in many births and I am worried and afraid that you will make me be born again. My mind struggles as if I were staying under the same roof as a snake.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் தாமரைக்கண்ணா! என் தாமரைக்கண்ணா!; இன்னம் இனிமேலும்; தூங்கு ஆர் சஞ்சலம் மிக்க; பிறவிக்கள் பிறப்புக்களிலே; புகப் பெய்து புகும்படி செய்து; வாங்காய் என்னை மீட்காதிருந்திடுவையோ; என்று என்று சிந்தித்து பயந்து; சிந்தித்து நான் நான் கவலையுடன்; அதற்கு அப்பிறவித்துன்பத்திற்கு; அஞ்சி பயந்து; பாம்போடு ஒரு பாம்போடு ஒரு; கூரையிலே கூரை வீட்டிலே; பயின்றாற்போல் வசிப்பது போல் உள்ளது; உள்ளம் தாங்காது என் மனம் தாங்காமல்; தள்ளும் தடுமாறுகிறது நீ தான் காக்கவேண்டும்