PT 11.8.2

புயலில் சிக்கிய படகோட்டுவோர் போல

2023 சீற்றமுள ஆகிலும்செப்புவன் * மக்கள்
தோற்றக்குழி தோற்றுவிப்பாய்கொலென்றஞ்சி *
காற்றத்திடைப்பட்ட கலவர்மனம்போல் *
ஆற்றத்துளங்காநிற்பன் ஆழிவலவா!
2023 cīṟṟam ul̤a * ākilum cĕppuvaṉ * makkal̤
toṟṟak kuzhi * toṟṟuvippāykŏl ĕṉṟu añci- **
kāṟṟattiṭaippaṭṭa * kalavar maṉampol- *
āṟṟat tul̤aṅkā niṟpaṉ * āzhi valavā-2

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2023. Even though I am angry at you who carry a victorious discus, I would tell you this. I do not want you to put me in a womb and make me be born again. I tremble like the minds of people on a boat caught in a terrible storm.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி வலவா! வலது கையில் சக்கரமுடையவனே!; சீற்றம் நீ கோபிக்கும்படியான; உள ஆகிலும் குற்றங்கள் பல உள்ளனவானாலும்; செப்புவன் நான் கூறுவதை கேட்பாயாக; மக்கள் மக்களின் காமவசத்தால்; தோற்றக் குழி தோற்றக் குழியில் தள்ளி; தோற்றுவிப்பாய்கொல் தோற்றுவிப்பாயோ; என்று அஞ்சி என்று அஞ்சி பயந்து; காற்றத்திடைப்பட்ட பெருங்காற்றில் அகப்பட்ட; கலவர் மரக்கலத்திலே உள்ளவர்களின்; மனம்போல் மனம்போல; ஆற்ற மிகவும்; துளங்கா நிற்பன் நடுங்குகிறேன்